FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on January 28, 2016, 12:29:58 PM

Title: பால் நிலவு
Post by: Maran on January 28, 2016, 12:29:58 PM


மென்திரை வனப்பது கருவிழியுடன் புணார்ந்தாறொத்த இரவு,
கரியதன் கூர்கொம்பு போல் ஒரு நிலவு அதன் பால்.

வண்ண நிலவு,
பால் மழை பொழிய,
அல்லி மலர்கள் வாழ்த்த,
காரிருள் தன் கரம் கொண்டு அணைக்க,
காதலர்கள் கனவுலகை எதிர்நோக்க,
இரவு நடை போட்டு வருகிறது.

தொட்டுவிட முடியாமல்
எட்டி நின்றது
பால்நிலவு....
கைகளில் நீரை ஏந்தி
நீரினில் நிலவை வரவழைத்து
பருகினேன்
பால்நிலவையும்...



Title: Re: பால் நிலவு
Post by: aasaiajiith on January 28, 2016, 01:08:08 PM
அழகா இருக்கு !!

இன்னும் அழகா எழுதிட தடமிருக்கு ....

வாழ்த்துக்கள் !!
Title: Re: பால் நிலவு
Post by: SweeTie on January 28, 2016, 06:47:30 PM
மாறன் அழகான  கவிதை. .    பால் நிலவுக்கு  அழகான விளக்கம்   கொடுத்துள்ளீர்கள்.
வாழ்த்துக்கள். 
Title: Re: பால் நிலவு
Post by: Maran on January 28, 2016, 07:41:00 PM


சிறப்பான வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி இனியா, நண்பா ஆசைஅஜித்



நான் இத்தளத்தில் என் சிந்தனையில் உதித்த ஆழச்சிறந்த கவிதைகளை இங்கு பதிவிடுவது இல்லை நண்பா ஆசைஅஜித். இங்கு பதிவிடும் கவிதைகள் வெற்று காகிதத்தில் கவிதை எழுதி பரணியில் வைத்தது போல் நிகழ்ந்து விடுகிறது. ரசிக்க, பாராட்ட, வாழ்த்த கவிப்பிரியர்களும், வாசகர்களும் இல்லை. 

உங்கள் பால்நிலவு கவிதையை பார்த்து மறுமொழி கூற உதித்த வரிகள், இவ்வரிகளை அங்கு பதிவிட்டால் உங்கள் கவிதைகளை  நான் ஆதிக்கம் செய்தது போல் ஆகும் என்பதால் தனி இழை தொடங்கி பதிவிட்டுள்ளேன்.

சில கவிதைகளில் சொற்சிக்கனம் அழுத்தம் தரும். பல கவிதைகளில் சொற்சிக்கனம் முக்கியம். உணர்வுகளால் பின்னப்படும் கவிதைகளில் அழுத்தம் முக்கியம். வாசித்து முடித்தபின்னும் எண்ணத்தில் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

புதுக் கவிதை உலகில் சில அலங்காரமான கவிதைகளில் அதிகமான சொற்சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது சிரமம் தானென்றாலும் அப்படிப்பட்ட தருணத்தில் ஒரு balance இருக்கவேண்டும். மேலும், எப்படிப்பட்ட கவிதையாயிருந்தாலும் கவிதையானது அடிப்படையில் வளவளா கொழகொழா என்றிருக்கக்கூடாது. அவ்வளவே என் எண்ணம்.