FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 27, 2016, 10:05:21 PM
-
மீல்மேக்கர் மசாலா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2FMeal-Maker-Masala-tamil-e1453816387891.jpg&hash=77624127e7c94b248a8e9333e3c4ca27a77bfa3f)
தேவையான பொருட்கள்:
மீல்மேக்கர் – 200 கிராம்
பெரிய வெங்காயம் – 2
தேங்காய் துருவல் – 1/2 கப்
இஞ்சி – சிறு துண்டு
பூண்டு – 80 பல்
சோம்பு – 1 ஸ்பூன்
மிளகாய் வற்றல் – 8
உப்பு, எண்ணெய் – தேவைக்கு
செய்முறை:
3 கப் தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து, அதில் மீல் மேக்கரைப் போடவும். அரை, முக்கால் மணி நேரம் ஊற விடவும்.
ஊறியவுடன் இறுகப் பிழிந்து தண்ணீரை வடித்து எடுக்கவும். தேங்காய், இஞ்சி பூண்டு, சோம்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து
மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம்
போட்டு, வதக்கவும். வதங்கியதும் அரைத்த கலவையை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். ஊறிய மீல் மேக்கரில் கால் கப்
தண்ணீர் சேர்த்து வேக விடவும். வெந்ததும் நன்றாக கிண்டி இறக்கவும். இப்போது சுவையான மீல்மேக்கர் மசாலா ரெடி.