FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 27, 2016, 10:02:48 PM
-
இனிப்பு குழிப்பணியாரம்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F-%25E0%25AE%2595%25E0%25AF%2581%25E0%25AE%25B4%25E0%25AE%25BF%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25A3%25E0%25AE%25BF%25E0%25AE%25AF%25E0%25AE%25BE%25E0%25AE%25B0%25E0%25AE%25AE%25E0%25AF%258D-e1453816281713.jpg&hash=3d2a779fbd42f933cb0165139256f4bfb9c1578c)
தேவையான பொருட்கள்:
பச்ச அரிசி 1/2 கப்,
உழுந்து-1/2 கப்
வெந்தயம்-1 டீஸ்பூன்
வெல்லம் 1 கப்
சுக்கு: 1 சிறியத்துண்டு
ஏலக்காய்: 4
தேங்காய்- 1 சிறிதாக நறுக்கியது
முந்திரி பருப்பு- 10 நறுக்கியது
நெய்-சிறிதளவு
செய்முறை:
1. முதலில் மாவை இட்லி மாவு அறைப்பது போல் அறைத்து உப்பு சேர்த்து புளிக்கவைக்க்கவும்,
2. பின்பு சுக்கு பொடித்தது,நெய்யில் வருத்த தேங்காய், முந்திரிம், வெல்லம் துறுவியது சேர்த்துகொள்ளவும்.
3. பிறகு குழிப்பணியாரச்சட்டியில் நெய்ஊற்றி, மாவை சிறு கரண்டியால் ஊற்றி, சிறிது நேரம் கழித்து சிறு கரண்டியால் திருப்பி, இருபுறமும் பொன்னிற்ம் வரும்வரை வேகவைத்து பரிமாறவும்.