FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 27, 2016, 09:58:59 PM
-
ஓமம் மோர்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Foma.jpg&hash=38088cd109438d48583ddcd1a46527942012f542)
தேவையான பொருட்கள்:
தயிர் – 200 மி.லி.
மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி
பெருங்காயத்தூள் – கால் தேக்கரண்டி
உப்பு – சுவைக்கு
தாளிக்க :
ஓமம் – 2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
நல்லெண்ணெய் – அரை தேக்கரண்டி
செய்முறை:
* தயிரில் அரை லிட்டர் தண்ணீர் கலந்து அதில் மஞ்சள் தூள், உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்
* வாணலியில் எண்ணெய் உற்றி ஓமம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வறுக்கவும்.
* பின்பு அதில் கடைந்து வைத்த மோரை ஊற்றி சிறு தீயில் சுட வைக்கவும்.
* மோர் முறிய ஆரம்பிக்கும் போது தீயை அணைத்து விடவும்,
* இதை சாதத்துடன் கலந்து சாப்பிடலாம், குடிக்கவும் செய்யலாம். இது பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்டது.