FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on January 27, 2016, 09:30:44 PM

Title: ~ தன்னம்பிக்கையை அதிகரிக்க !!! ~
Post by: MysteRy on January 27, 2016, 09:30:44 PM
தன்னம்பிக்கையை அதிகரிக்க !!!

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xfa1/v/t1.0-9/12573062_1531484413815695_3015409600980799398_n.jpg?oh=07b27f9732490661fe7d896cc0b7e643&oe=5731B7E3)

1. எப்போதும் பின் வரிசையில் ஒளியாதீர்கள். முன்
வரிசைக்கு வாருங்கள்.

2. யாரைச் சந்தித்தாலும், தைரியமாக அவர்கள் கண்களைப்
பார்த்துப் பேசுங்கள்.
அவர் எப்பேர்ப்பட்ட பிரபலமாக இருந்தாலும்,
தலை கவிழ்ந்து தரையில் விரலால் கோலம்
போடுவதெல்லாம் வேண்டாம்.

3. நீங்கள் நடக்கிற வேகத்தை அதிகப்படுத்துங்கள்.
நடையில் தெரியும் அந்த சுறுசுறுப்பு, உற்சாகம் உங்கள்
செயல் வேகத்தையும் தானாக அதிகரிக்கும்.

4. எந்த கூட்டத்திலும் அடுத்தவர்கள் பேசட்டும்
என்று காத்திருக்காதீர்கள். அங்கே கேட்கிற முதல் குரல்
உங்களுடையதாகட்டும்.

5. எந்நேரமும் உதடுகளில் ஒரு புன்னகையை வைத்திருங்கள்.
அது தருகிற தன்னம்பிக்கை வேறு எங்கேயும் கிடைக்காது