FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: PraBa on January 27, 2016, 07:14:01 PM
-
இந்தியன் என்றால் என்னது தம்பி?
==============================
சாதியும் இருக்கும்;
மதமும் இருக்கும்;
சாத்திரம் மக்களை
வேறெனப் பிரிக்கும்!
மோதலும் இருக்கும்;
முதலாளி இருப்பான்;
முன்னேற்றம் சிலர்க்கே
வாய்ப்பாக இருக்கும்!
குந்தியே தின்பான்
ஒருவன்; மற்றவன்
குடல்வற்றிச் சாவான்;
இவற்றிடை யாவரும்
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சம்மென்றால்
எப்படித் தம்பி?
கொள்ளையன் ஆள்வான்;
கொடுமைகள் செய்வான்;
கொடுக்கும் உரிமைகள்
கொடாது தடுப்பான்!
வெள்ளையன் ஆண்டதும்
வெறியர் ஆள்வதும்
வேறுபா டின்றி
விளங்கிடும் தம்பி!
முந்திய ஆட்சியை
அடிமைஎன் றார்கள்!
முன்னினும் இவர்கள்
அடிமைசெய் தார்கள்!
இந்தியன் என்றால்
என்னது தம்பி?
எல்லாரும் சமமென்றால்
எப்படித் தம்பி?
-பாவலரேறு பெருஞ்சித்திரனார் - 1988
-
இத்தளத்தில் பெருஞ்சித்திரனார் ஞாபகப்படுத்தி விட்டதிற்கு நன்றி நண்பா...
இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும், பிரபாகரன் அவர்களின் போராட்டத்திலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர்.
பெருஞ்சித்திரனார் 20 ம் நூற்றாண்டு தமிழ் அறிஞர் ஆவார். தமிழ்தேசிய தந்தையாக தமிழர்களால் போற்றப்படுகிறார். தமிழ் மொழியின் மீது கொண்டுள்ள பற்றால் தென்மொழி என்ற இதழை நடத்திவந்தார். தமிழ்ப்பற்றும் தமிழ் உணர்வும் கொண்டு தம் பாட்டு ஆற்றலால் இதழை நடத்தி வந்தார்
“வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம்
வேரூன்றிய மால்முதல் உயிர்மொழி”
என்று தமிழின் பெருமையைப் போற்றுகிறார் பெருஞ்சித்திரனார்.
“தொன்மை, முன்மை, நுண்மை, திண்மை, எண்மை, ஒண்மை, இனிமை, தனிமை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, மும்மை, செம்மை, இயன்மை, வியன்மை என வரும் 16 செவ்வியல் தன்மைகளைக் கொண்டது செம்மொழி அதுவே நம்மொழி” என்பார் பாவாணர்.
இவர்தம் நினைவைப் போற்றும் வண்ணம் சென்னை மேடவாக்கத்தில் ‘பாவலரேறு தமிழ்க்களம்’ என்னும் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது.
பெருஞ்சித்திரனாரின் பாதையே தமிழக விடுதலைக்கான பாதை. அதைத் தொடர்வதே இப்போதைக்கு அனைவருக்கும் அவசியத் தேவை.
-
அதி அத்தியாவசிய பகிர்வு !!
பகிர்வினில் மகிழ்வு பிரபா !!
நீங்கள் வழங்கிய தகவல்களும் கூட அதி அற்புதமானது மாறா !!
இவ்வரிகளை வாசிக்க வாசிக்க
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் திரு சீமான் அவர்களின் சாயல் தோன்றலை தவிர்க்கமுடியவில்லை .