FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 26, 2016, 08:49:26 PM

Title: ~ டெவில் சிக்கன் ~
Post by: MysteRy on January 26, 2016, 08:49:26 PM
டெவில் சிக்கன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fger.jpg&hash=bf671c127e85ab1ab9afd238db2bf075eddcf56f)

தேவையானபொருட்கள்:

சிக்கன் – 200 கிராம்
பஜ்ஜி மிளகாய் – 2 (மீடியம் சைஸ் துண்டுகள்)
குட மிளகாய் – 1 (மீடியம் சைஸ் துண்டுகள்)
இஞ்சி-பூண்டு விழுது – 5 கிராம்
பெரிய வெங்காயம் – 1 (சதுரமாக வெட்டியது)
தக்காளி சாஸ் – 50 கிராம்
இடித்த மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்
வெள்ளை மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சர்க்கரை – 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு – 10 கிராம்
முட்டை – ஒன்றை உடைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கலக்கி, அதில் இருந்து பாதியை எடுத்துக் கொள்ளவும்.
மைதா மாவு – 50 கிராம்
கார்ன்ஃப்ளார் – 100 கிராம்
வெங்காயத்தாள் – 10 கிராம் (பொடியாக நறுக்கவும்)
தக்காளி – 1 (பொடியாக நறுக்கவும்)
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

சிக்கன் துண்டுகளைக் கழுவி, மைதா, கார்ன்ஃப்ளார், உப்பு, உடைத்த முட்டை, இஞ்சி, பூண்டு விழுது, சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பொரித்தெடுக்கவும். இன்னொரு வாணலியில் எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி, பூண்டு, பெரிய வெங்காயம், குட மிளகாய், பஜ்ஜி மிளகாய் போட்டு வதக்கவும்.
இதில் சிறிது தண்ணீர் சேர்த்து தக்காளி சாஸ், இடித்த மிளகாய்த்தூள், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்க்கவும்.
இத்துடன் பொரித்த சிக்கன், தக்காளி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் ஆகியவற்றைச் சேர்த்து இறக்கவும்.