FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: சக்திராகவா on January 26, 2016, 11:03:12 AM

Title: வாழ்த்த முடியாத குடியரசில்
Post by: சக்திராகவா on January 26, 2016, 11:03:12 AM
எங்கும் ஏழையே
என்தமிழ் நாட்டிலே!
வெள்ளையன் கூட நல்லவனோ?
எனும் எண்ணமும்
தோன்றுதே வெறுத்ததனால்!

ஆட்சியின் ஆசையில்
ஆளவந்தோர்
சூழ்ச்சியில் வீழ்ந்தது
சுதந்திர பூமியும்

குடியரசென்பது
குடி அரசானதோ
தட்டிக்கேள்
தடியரசாகும்

கல்வியின் நிலை
கட்டுகட்டாய் விலை
எப்படி எட்டும்
என் ஏழைக்கு

மன்னர் ஆண்ட மாநிலமே
வீர மன்னர் மாண்ட மா நிலமே
உனை வந்தோர் ஆள வைத்துவிட்டோம்
இனி சுதந்திரம் பெறுவதெப்போது

வாழ்த்த முடியாத குடியரசில்
வருத்ததோடு சக்தி

(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/12647448_391664377670964_8142631452326247620_n.jpg?oh=830b0fc1bc9881c98078494108e3cd65&oe=57441E51&__gda__=1463746875_729923394221d3ed99ee8a19af0388b7)
Title: Re: வாழ்த்த முடியாத குடியரசில்
Post by: JoKe GuY on January 31, 2016, 09:01:45 AM
குடியரசென்பது
குடி அரசானதோ
தட்டிக்கேள்
தடியரசாகும்

உங்களின் சமூக சிந்தனைக்கு எனது வணக்கத்துக்குரிய பாராட்டுக்கள்.வளர வேண்டும் உங்களின் கவிதைகள்.