FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 25, 2016, 09:53:03 PM
-
கத்திரிக்காய் ஃப்ரை
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.wp.com%2Fwww.koodal.com%2Fcontents_koodal%2Fwomen%2Fimages%2F2011%2FBrinjal%2520Fry-jpg-1080.jpg&hash=83c374c57be2f92721dc088848e98972f0df3e2a)
என்னென்ன தேவை?
கத்திரிக்காய் – 6,
அரிசி மாவு – 4 மேஜைக்கரண்டி,
மிளகாய் தூள் -2 தேகரண்டி,
மல்லி தூள் -1 மேஜைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
எப்படி செய்வது?
தேவையான பெருட்களை எடுத்துக்கொள்ளவும். கத்தரிக்காயின் மேல் பகுதியை நீக்கி விடவும்.பின்பு அதனை வட்டமாக நறுக்கிக்கெள்ளவும். ஒரு தட்டில் அரிசி மாவு எடுத்துக் கெள்ளவும். மசாலா தூள்களை சேர்க்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். பின்பு கத்தரிக்காயை அதில் பிரட்டி எடுக்கவும். அனைத்து பக்கங்களிலும் படும்படி பிரட்டி எடுக்கவும். கடாயில் எண்ணெய்விட்டு சூடாக்கவும். அதில் கத்தரிக்காய் துண்டுகளைப் பேடவும். ஒரு பாத்திரத்தால் மூடி வைக்கவும். இரு பக்கங்களும் வெந்த பின்பு சுவையாக சாப்பிட்டு மகிழலாம்.