FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 25, 2016, 09:28:39 PM
-
சுட்ட கத்திரிக்காய் சட்னி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1.wp.com%2Ftamilcookery.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F1449752718-6238.jpg%3Ffit%3D300%252C225&hash=221b61b93628ee2ec24ed771b3f6e1c87e56f222)
கத்திரிக்கயை சுட்டு அரைக்கும் இந்த சட்டினி மிகவும் அருமையான சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
கத்தரிக்காய் – 2 (பெரியது)
சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது)
உப்பு – தெவையான அளவு
பச்சை மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – சிறிது
புளி – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி
செய்முறை
கத்திரிக்காய் முழுவதும் எண்ணெய் தடவி சூடான தணலில் வத்து திருப்பி விட்டு சுட்டு எடுத்து ஆறியதும் தோலினை அகற்றவும்.
மிக்ஸியில் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை வைத்து நைசாக அரைக்கவும். பிறகு தோல் நீக்கிய கத்திரிக்காயை அரைத்த விழுதுடன் மிக்ஸியில் போட்டு சுற்றவும்.
சுவையான சுட்ட கத்திரிக்காய் சட்னி தயார். இதனை இட்லி, தோசையுடன் தொட்டு கொள்ள அருமையாக இருக்கும்.