FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Yousuf on January 08, 2012, 01:38:45 AM

Title: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: Yousuf on January 08, 2012, 01:38:45 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-B3T7MeldnvE%2FTvVhCkUc-sI%2FAAAAAAAAGf0%2FMm7mM94BCXY%2Fs200%2Frajasthan_doctors.jpg&hash=37009dd6687a0f4415ccfac43477d645f9a766d6)

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் டாக்டர்கள் துவங்கியிருக்கும் காலவரையற்ற போராட்டத்தினால் 10 நோயாளிகள் முறையான சிகிச்சை இல்லாமல் உயிரிழந்திருக்கின்றனர்.

ராஜஸ்தான் டாக்டர்கள் பல ஆண்டு காலமாக பதவி உயர்வுக்காக காத்திருப்பதாகவும், சம்பள விகிதாச்சாரம் போதாது என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  அரசு ஆஸ்பத்திரியை நம்பி வரும் ஏழை நோயாளிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக விபத்துக்களில் சிக்கி வருவோர் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்த போராட்டத்தில் சுமார்  10ஆயிரம் டாக்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சிந்திக்கவும்: உலகிலேயே டாக்டர் தொழில் செய்பவர்கள் மாதிரி பணம் சம்பாதிப்பவர் வேறுயாரும் இருக்க முடியாது. முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மருத்துவம் செய்வதை மக்கள் தொண்டாக நினைத்தார்கள். இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

சம்பளம் போக அரசின் மாத்திரை, மருந்துக்களை வெளியே விற்ப்பது, தனியாக கிளினிக் வைத்து நடத்துவது என்று சம்பாத்தியம் 'களை" கட்டும் இவர்களே போராட்டம் என்று குதித்தால் அன்றாடம் கூலி வேலை செய்யும் மக்களின் நிலைமையை என்னவென்று சொல்வது. எந்தவிதமான குற்ற உணர்வும் இல்லாமல் கோஷம் போடுவதை பாருங்கள் இவர்கள் டாக்டர்களா? இல்லை கொலைகாரர்களா? இவர்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: RemO on January 09, 2012, 12:39:25 AM
Quote
முன்னொரு காலத்தில் வைத்தியர்கள் மருத்துவம் செய்வதை மக்கள் தொண்டாக நினைத்தார்கள். இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

unmai thaan usf athu mattumallamal maruthuva padippu kuda ippothu panakaararkalukku matum thaan entraagi vitathu

maruththuvam uyir kaakkum uthavi enpathai maranthavargal epadi uyir kaakka pogiraarkal
 
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: Yousuf on January 09, 2012, 09:51:18 AM
சுயநலவாதிகளின் தேசத்தில் பொதுநலத்தை எவ்வாறு நாம் எதிர் பார்க்க முடியும் ரெமோ!

நன்றி!
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: செல்வன் on January 10, 2012, 07:02:33 PM
1.மருத்துவத்துறை  படிப்புகள் யாவும் முற்றிலும் திறமை & மதிப்பெண்கள் அடிப்படையிலே இலவசமாக தரப்பட வேண்டும். அப்படி இலவசமாக அரசாங்க கல்லூரிகளில் படித்த மருத்துவர்கள் மட்டுமே அரசாங்க வேலைகளில் அமர்த்த பட வேண்டும்.  இப்படி அரசாங்க கல்லூரிகளிலே திறமை மற்றும் மதிப்பெண் அடிப்படையிலே பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் சேவை நோக்கிலே மருத்துவ தொழிலை செய்வார்கள்.அவர்கள் தனியே மருத்துவமனை அமைப்பினும் கட்டணங்கள் குறைவாகவே வசூலிப்பார்கள்.ஏழைகளும் இந்த திறமை மிக்க மருத்துவர்களையே அணுகுவார்கள்.
ஒரு வருடம் கட்டாயமாக கிரமாபுரங்களில் சேவை செய்யவேண்டும் என்ற தற்போதைய மருதுவகலூரி விதிமுறைகளையும் முழுதளவில் விரும்பி ஏற்றுக்கொண்டு கிராமப்புறங்களில் மருத்துவம் செய்யும் பயிற்சியை பெறுவர்.

2.தங்களுடைய கௌரவத்துக்காக மருத்துவ படிப்பை விரும்பும் பணக்கார மாணவர்களுக்கு தனியே மிக குறைவான குறிப்பிட்ட அளவு இடங்கள் ஒதுக்கப்பட்டு  தனியார் மருத்துவகல்லூரிகளிலே அவர்கள் விருப்பப்படி கட்டம் செலுத்தி கல்வி வழங்கப்பட வேண்டும்.
பணக்கார மாணவர்கள் பணம் கொடுத்து கல்வி பயின்றதால் பணகாரகளுக்கு மருத்துவம் செய்யும் ஆடம்பரம் மிக்க மருத்துவமனைகளை நிறுவி மருத்துவம் செய்ய ஏதுவாக அமையும்.

இது போன்று நடைமுறை வருமேயானால் மேலே யூசுப் அவர்கள் சுட்டிக்காட்டியதை போன்ற கொலைகாரர்களின்  போராட்டம் வர வாய்ப்பே இல்லை . சமுதாய விழிபுணர்வுக்கு உகந்த செய்தியை தந்திருகிறீர்கள் யூசுப்.நன்றி.
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: Yousuf on January 10, 2012, 07:21:58 PM
Nanri Selvan!
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: gab on January 10, 2012, 10:43:22 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-B3T7MeldnvE%2FTvVhCkUc-sI%2FAAAAAAAAGf0%2FMm7mM94BCXY%2Fs200%2Frajasthan_doctors.jpg&hash=37009dd6687a0f4415ccfac43477d645f9a766d6)

இப்போது மருத்துவத்துறை என்பது கொள்ளைகாரர்களின் கூடாரமாகி விட்டது.  மக்கள் தொண்டு என்பது மறுவி பெரும் வியாபாரமாகி போனது.

.



Kandippa ithu pondru porattam seibavargalai kadumaiyana sattam kondu odukka vendum. Nalla thagaval yousuf.
Title: Re: கொலைகாரர்களின் போராட்டம்!
Post by: Yousuf on January 10, 2012, 11:12:13 PM
Nanri Gab!