FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 24, 2016, 07:40:20 PM

Title: ~ தயிர் மசாலா இட்லி ~
Post by: MysteRy on January 24, 2016, 07:40:20 PM
தயிர் மசாலா இட்லி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi0.wp.com%2Ftamilcookery.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2F423c3ef0-2273-4f34-9581-e211305dc6a7_S_secvpf.gif%3Ffit%3D300%252C225&hash=3ed433c8ad75b258b1ea6381f3a0df413d7d41f9)

தேவையான பொருட்கள்:

இட்லி மாவு – 2 கப்,
புளிக்காத புது தயிர் – 3 டீஸ்பூன்,
ஓமப்பொடி – 3 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு,
கொத்த மல்லித்தழை – சிறிதளவு.

அரைக்க:

தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
முந்திரிப்பருப்பு – 6.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,
பெருங்காயம் – அரை டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

• மாவைக் இட்லி சட்டியில் ஊற்றி சிறு சிறு இட்லிகளாக ஊற்றி வேக வைத்துக்கொள்ளுங்கள்.

• அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக அரைத்து தயிருடன் கலந்துகொள்ளுங்கள். அத்துடன் கடுகு, பெருங்காயம் தாளித்து உப்பு சேர்த்து, நன்கு கலந்துகொள்ளுங்கள்.

• பரிமாறும்போது, கிண்ணங்களில் இட்லிகளை வைத்து, கடைந்த தயிரை அதன்மேல் ஊற்றி மல்லித்தழை, ஓமப்பொடி, மிளகாய்தூள், சீரகத்தூள் துவி பரிமாறலாம். அல்லது வெறும் மல்லித்தழையை மட்டும் தூவியும் பரிமாறலாம்.

• இந்த இட்லிக்கு உப்பு காரம் சற்று தூக்கலாக இருந்தால் சுவையாக இருக்கும்.