FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 24, 2016, 05:16:31 PM
-
ஒரே வாரத்தில் உடல் எடையில் மாற்றத்தை காண இந்த டயட்டை பின்பற்றுங்க…
(https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12553005_1530788777218592_1036211145163395719_n.jpg?oh=5d3ae65d2d097a67b2b080cd60f6cf19&oe=56FCCFB2&__gda__=1462891668_331a6d30604bd8911b14bfa505a3987c)
பழங்களும், காய்கறிகளும் – 33%
காய்கறி பழங்களில் தான் அதிகமான வைட்டமின் மற்றும் மினரல்ஸ் இருக்கின்றன. தினமும் 400 கிராம் காய்கறி, பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் மாரடைப்பு, உடல் பருமன், நீரிழிவு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்க முடியும்.
மாவுச்சத்து உணவுகள் – 33%
கார்ப்ஸ் உணவுகளின் மூலமாக தான் உடற்சக்தி அதிகமாக கிடைக்கிறது. அரிசி, தானியங்கள் போன்ற உணவுகளை சுழற்சி முறையில் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் தட்டில் மூன்றில் ஒரு பங்கு கார்ப்ஸ் உணவு தான் சிறந்த அளவு. உடல் வேலை அதிகம் இல்லையேல் கார்ப்ஸ் உணவை குறைத்துக் கொள்ளுங்கள்.
பால் மற்றும் பால் பொருட்கள் – 15%
பால் உணவுகளின் மூலமாக தான் அதிகமான அளவில் புரதம், கால்சியம் மற்றும் மினரல்ஸ் கிடைக்கிறது. எலும்பு மற்றும் பற்களின் வலிமைக்கு இது மிகவும் அவசியமானது.
இதர புரத உணவுகள் – 12%
இறைச்சி, மீன், முட்டை, பீன்ஸ் போன்ற பால் உணவுகளற்ற புரதச்சத்து உணவுகளும் மிகவும் அவசியம். கொழுப்பை கரைக்க, தசைகளை வலிமையாக்க இவைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் இவை பசியை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை.
கொழுப்பும், சர்க்கரை – 7%
கொழுப்பும், சர்க்கரையும் உங்கள் டயட்டில் அதிகரிக்கும் போது, கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதனால் இதய நலன் சீர்கெடுகிறது. எல்.டி.எல் கொழுப்பு தான் தவிர்க்கப்பட வேண்டியது. எச்.டி.எல் என்ற நல்ல கொழுப்பு உட