FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 23, 2016, 11:10:06 PM

Title: ~ லெமன் சிக்கன் ~
Post by: MysteRy on January 23, 2016, 11:10:06 PM
லெமன் சிக்கன்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fleman.jpg&hash=ff0532c5b8e0c12bb0cfcf402b891e5aeb6e8b42)

தேவையான பொருட்கள்:

கோழி – 1/2 கிலோ
எலுமிச்சை சாறு – 3 ஸ்பூன்
குடை மிளகாய் – 3
சோள மாவு – 6 ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 ஸ்பூன்
சிக்கன் ஸ்டாக் – 1 கப்
எண்ணெய், உப்பு – தேவைகேற்ப

செய்முறை:

கோழித் துண்டுகளை எலும்புகள் நீக்கி, நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கோழித் துண்டங்கள் மீது தடவி ஊறவையுங்கள். இரண்டு ஸ்பூன் சோள மாவு அரை கப் நீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். குடை மிளகாய்களின் விதைகளை நீக்கி விட்டு நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியில் பொரிக்கும் அளவிற்கு எண்ணெய் விட்டு, சூடேறியதும் ஊற வைத்துள்ள கோழித் துண்டங்களை கார்ன்ஸ்டார்சில் புரட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும். பொன்னிறமாக வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும்.மற்றொறு வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கி வைத்துள்ள குடை மிளகாய் துண்டங்களைப் போட்டு லேசாக வதக்க வேண்டும்.
அத்துடன் மிளகுத் தூள், தேவையான உப்பு, சிக்கன் ஸ்டாக் ஆகியவற்றை சேர்த்து கொதிக்கவிட வேண்டும். நன்கு கொதிக்கும் போது கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டாச்சினை ஊற்றிக் கலந்து மிதமான தீயில் வேகவிட வேண்டும். குழம்பு கெட்டியானவுடன் பொரித்து வைத்துள்ள கோழித் துண்டுகளைப் போட்டு மேலும் சில நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவிட வேண்டும். மீதமுள்ள எலுமிச்சை சாற்றினை ஊற்றிக் கலந்து இறக்கி சூடாகப் பரிமாற வேண்டும்.