FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 23, 2016, 10:33:52 PM
-
தயிர் மசாலா பிராமண சமையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F06%2Funnamed2.jpg&hash=c466250879f2459e6e401a36f709492e9f5c351c)
தேவையான பொருட்கள்:
கெட்டி தயிர் – 2 கப்
தக்காளி – 3
கடலைமாவு – கால் கப்
நெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
பூண்டு – 6 பல்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
அரைக்க:-
பூண்டு – 5
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
சீரகம் – 2 டீஸ்பூன்
மல்லித்தழை – ஒரு கைப்பிடி
முந்திரி – 6
செய்முறை:
அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நன்கு அரையுங்கள். அரைத்த விழுதுடன், தயிர், கடலை மாவு, உப்பு சேர்த்து, கட்டியில்லாமல் கரையுங்கள். தக்காளியை சற்றுப் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய், நெய் சேர்த்துக் காயவைத்து, தக்காளித் துண்டுகளை சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். இதனுடன், விழுதுடன் கலந்து வைத்திருக்கும் தயிர் கலவைச் சேர்த்து, சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்குங்கள். சப்பாத்தி, பூரிக்கான சுவை மிகு சைட்டிஷ் இது.