FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 23, 2016, 10:21:19 PM
-
காலிஃபிளவர் கேரட் புலாவ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fgali1.jpg&hash=276a259cd5d5df5592e75bc4e0583c7517bf0a04)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – ஒரு கப்
காலிஃபிளவர் – 1
கெட்டித் தயிர் – ஒரு கப்
தக்காளி சாறு – அரை கப்
நறுக்கிய கேரட், உருளைக்கிழங்கு – ஒரு கப்
மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன்
பெரிய வெங்காயம் – 2
லவங்கம் – 2
பட்டை – சிறிய துண்டு
பிரியாணி இலை – 1
மசாலா பொடி செய்ய :
ஏலக்காய், பட்டை – சிறிதளவு
அரைக்க:
இஞ்சி – சிறிய துண்டு
காய்ந்த மிளகாய் – 4
புளி – சிறிதளவு
கொத்தமல்லித் தழை – அரை கப்
தேங்காய்த் துருவல் – கால் கப்
கசகசா – ஒரு டீஸ்பூன்
முந்திரிப் பருப்பு – 10
பெரிய வெங்காயம் – 1
உப்பு, எண்ணெய், நெய் – தேவையான அளவு
செய்முறை:
* ஏலக்காய், பட்டை இரண்டையும் சம பங்கு சிறிது எடுத்து நெய்விட்டு வறுத்துப் பொடித்துக் கொண்டால் மசாலா பொடி தயார்.
* காலிஃபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
* அரிசியைப் பத்து நிமிடம் ஊறவைத்து, தண்ணீரை வடித்து, சிறிது நெய்விட்டு 3 நிமிடங்கள் வறுத்துக்கொள்ளுங்கள்.
* குக்கரில் எண்ணெய், நெய் விட்டுச் சூடானதும் வாசனை பொருட்கள், மசாலாப் பொடி போட்டு வதக்கி, வெங்காயம், காய்கறிகளைச் சேர்த்து வதக்குங்கள்.
* பிறகு தக்காளி ஜூஸ், அரைத்த விழுது, கடைந்த தயிர் விட்டுக் கிளறி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள்.
* இப்போது அரிசியைச் சேர்த்துக் கிளறி குக்கரை மூடி இரண்டு விசில் விட்டு இறக்கிவையுங்கள்.
* சுவையான காலிஃபிளவர் கேரட் புலாவ்