FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 23, 2016, 10:09:40 PM
-
முழு கத்தரிக்காய் கிரேவி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fhqdefault.jpg&hash=0c0b31fa0abea86b7fc6bd10f11634e20e7546b9)
சிறிய முழு கத்தரிக்காய் -15,
பூண்டு – 15 பற்கள்,
சின்ன வெங்காயம் -15,
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்
மசாலா அரைப்பதற்கு:
வற்றல் – 15,
சோம்பு – ஒரு ஸ்பூன்,
சீரகம் – ஒரு ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 50 மில்லி,
கடுகு – ஒரு ஸ்பூன்,
சோம்பு – ஒரு ஸ்பூன்,
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்.
கத்தரிக்காயின் காம்பை நீக்கி 4 ஆக லேசாக வகுந்து கொள்ளவும்.வரமிளகாய், சோம்பு, சீரகம்,உப்பு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வரமிளகாய், சேம்பு, சீரகம், உப்பு சேர்த்து அம்மி அல்லது மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அரதை்த மசாலவில் பாதியை வதக்கி (பச்சை வாடை போக) எடுத்துக்கெள்ளவும்.
பின்பு மேலும் சிறிது எண்ணெயை விட்டு வாணலில் கத்தரிக்காயை நன்கு வதக்கவும். ஆறியதும் வகுத்த பகுதியில் வதக்கி இருக்கும் மசாலவை வைத்து அமுக்கவும். பின் மீதமுள்ள எண்ணெயை வாணலியில் விட்டு சூடாக்கி,அதில் தாளிப்பவற்றை போட்டு சிவந்ததும் பூண்டு,வெங்காயம் வதக்கிய பின்பு அரைத்த மசாலாவின் மீதமுள்ள பாதியை போட்டு 5 நிமிடம் வதக்கி (அடுப்பு குறைந்த தணலில் இருக்கவும்) அதில் ஸ்டப் செய்த கத்தரிக்காய்களைப்போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும்.