FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 23, 2016, 10:02:44 PM

Title: ~ ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம் ~
Post by: MysteRy on January 23, 2016, 10:02:44 PM
ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம்

(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xtf1/v/t1.0-9/12548920_1530583000572503_4406222676209686375_n.jpg?oh=f04115da74c7a07ff2a4b3dfc98a9603&oe=5732BB91)

குளிர்காலம் ஆரம்பித்துவிட்டது. குளிரின் தாக்கத்தால் நம்மில் பலர் சளியினால் அவதிப்படுவதுண்டு. சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள் உங்களுக்காக… சளிப்பிரச்சனையிலிருந்து விடுபட ஈஷா ஆரோக்யாவிலிருந்து சில வீட்டு வைத்தியக் குறிப்புகள்:

துளசி மற்றும் மிளகு: ஒரு கை பிடி துளசி இலைகளை 10 கருப்பு மிளகுடன் நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு மூன்றுமுறை சாப்பிடவும். ஸ்பானிஷ் தைம் மற்றும் மிளகு: 7 ஸ்பானிஷ் தைம் இலைகளை 10 கருப்பு மிளகுடன் ஒன்றாக சேர்த்து அறைத்து, ஒரு நாளைக்கு 3 முறை உட்கொள்ளுங்கள். “நாட்டுபுற இலை அல்லது மூலிகைகளின் ராணி” என்று அழைக்கப்படும் ஸ்பானிஷ் தைம், இந்தியாவில் கற்பூரவல்லி இலை(தமிழ்) என்று கூறுவதுண்டு. இஞ்சி சாறு: முக்கால் கப் தண்ணீரில், 4 தேக்கரண்டி இஞ்சிசாறு, 4 தேக்கரண்டி தேன், 4 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து அருந்தவும்.
Read more at : ஜலதோஷத்திற்கான வீட்டு வைத்தியம்