FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 23, 2016, 09:57:49 PM
-
வாதம், மூட்டுவலிக்கு மருந்தாகும் கண்வலிக்கிழங்கு
(https://scontent-kul1-1.xx.fbcdn.net/hphotos-xap1/v/t1.0-9/12509759_1530582290572574_7438829725947739016_n.jpg?oh=1facf36c69b085d65671d680f9f38713&oe=573696CC)
தாவரப்பெயர் -: GLORIOSA SUPERBA வாதம்,
மூட்டுவலி, தொழுநோய்குணமாக்கப் பயன்படுவதுடன் பேதி, பால்வினை நோய்வெண்குஷ்டம், ஆகியவற்றிக்கும் நல்லதோர் மருந்து. பிரசவ வலியைத் தூண்டும் மருந்தாகவும், சக்தி தரும் டானிக்காகவும் இருப்பதுடன், தலையில் வரும் பேன்களை ஒழிக்கவும் பயன்படுகிறது. இந்தக் கிழங்கை 7 வித நஞ்சுபதார்த்தங்களில் ஒன்றாகக் கூறப்படுகின்றது. இது பாம்புக்கடி, தேள்கொட்டு, தோல் சம்பந்தமான வற்றிக்குச் சிறந்தது.
பிரசவ வேதனைப்படுகின்ற பெண்களுக்கும் நஞ்சுக்கொடி கீழ் நோக்காமல் வேதனைப்படுகின்ற பெண்களுக்கும் பச்சைக் கிழங்கை அரைத்துத் தொப்புழ், அடிவயிறு, உள்ளங்கை, உள்ளங்கால் முதலிய ஸ்தானங்களில் தடவி வைக்க உடனே வெளியாகும். உடனே தடவி வைத்துள்ள பாகத்தைச் சலம் கொண்டு சுத்தப்படுத்தவும். நஞ்சுக்கொடிக்காகச் சிகிச்சை செய்யும் போது கருஞ்சீரகத்தையும், திப்பிலியையும், சமனெடையாகச் சலம் விட்டு அரைத்து சிறு சுண்டைக்காய் பிரமாணம் வைன் சாராயத்தில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சாலச்சிறந்தது.
இந்தக் கிழங்குடன் கருஞ்சீரகம், கார்போக அரிசி, காட்டுச்சீரகம், கஸ்தூரி மஞ்சள், கிளியுரம்பட்டை, கௌலா, சந்தனத்தூள் முதலியவற்றைச் சமனெடை சிறிய அளவாகசலம் விட்டு நெகிழ அரைத்துச் சொறி, சிரங்கு, ஊறல், படை, முதலியவற்றிக்குத் தேய்த்து நீராடிவரக் குணமாகும்.