FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 21, 2016, 09:55:41 PM

Title: ~ எக்லெஸ் கேரட் கேக் ~
Post by: MysteRy on January 21, 2016, 09:55:41 PM
எக்லெஸ் கேரட் கேக்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi0.wp.com%2Ftamilcookery.com%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fa17886fb-b79e-4318-afff-fda55cf0df8d-350x250.jpg%3Ffit%3D300%252C225&hash=0858c8cda767a7688be2ff8134ae46763dce25aa)

தேவையான பொருட்கள் :

மைதா – 3/4 கப்

கோதுமை மாவு – 1/4 கப்

துருவிய கேரட் – 1/2 கப்

தயிர் – 3/4 கப்

ஆலிவ் ஆயில் – 1/4 கப்

பால் – 2 1/2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை – 1/2 கப்
 
வென்னிலா எசன்ஸ் – 1/2 டீஸ்பூன்

ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்

பேப்பிங் பவுடர் – 1/2 டீஸ்பூன்

பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன்

உப்பு – 1/4 டீஸ்பூன்

வால்நட்ஸ் – ஒரு கையளவு

செய்முறை :

முதலில் மைதா, கோதுமை, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக கலந்து, சல்லடைக் கொண்டு சலித்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பௌலில் தயிர், பால், சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு சர்க்கரை கரையும் வரை கிளறி விட வேண்டும். பின்பு அதில் ஏலக்காய் பொடி, வென்னிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கிளறி, பின் அதில் துருவிய கேரட், சலித்து வைத்துள்ள மாவை சேர்த்து, வால்நட்ஸை பொடியாக வெட்டிப் போட்டு, கட்டி சேராதவாறு நன்கு கிளறி விட வேண்டும். பின்னர் மைக்ரோ ஓவனை 182 டிகிரியில் 10 நிமிடம் சூடேற்ற வேண்டும். அதற்குள் பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பரை விரித்து, அதன் மேல் வெண்ணெயை தடவி, மைதாவை சிறிது தூவி, பின் அதில் கேக் கலவையை ஊற்றி, மைக்ரோ ஓவனில் வைத்து 20-25 நிமிடம் பேக் செய்ய வேண்டும். அடுத்து கேக் நன்கு வெந்துவிட்டதா என்று டூத்பிக் கொண்டு குத்திப் பார்க்கும் போது, டூத்பிக்கில் மாவு ஒட்டினால், மீண்டும் ஓவனில் வைத்து 5-10 நிமிடம் பேக் செய்து இறக்க வேண்டும். இறுதியில் ஓவனில் இருந்து எடுத்த உடனேயே ஒரு ஈரமான துணியில் அதனை 15 நிமிடம் வைத்து, பின் அதனை ஒரு தட்டில் குப்புற தட்டி, அதன் மேல் உள்ள பட்டர் பேப்பரை எடுத்து, 1 மணிநேரம் கழித்து, கத்தியால் துண்டுகளாக்கினால், எக்லெஸ் கேரட் கேக் ரெடி!!!