FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 21, 2016, 09:32:31 PM

Title: ~ காளான் பொரியல் ~
Post by: MysteRy on January 21, 2016, 09:32:31 PM
காளான் பொரியல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FDec%2F88cf0b46-013e-468a-9fda-bc553fcb46a5_S_secvpf.gif&hash=ff72a6885028649fadcb45d00f9118ace3a88817)

தேவையான பொருட்கள்:

காளான் – 1 பாக்கெட்

சின்ன வெங்காயம் – 5

தக்காளி – 1

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு :

கடுகு – 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்

சீரகம் – 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிது

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

* முதலில் காளானை நறுக்கி, சுடுநீரில் போட்டு ஒருமுறை அலசிக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின்பு அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி, பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, காளான் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, மசாலா அனைத்தும் காளானுடன் ஒன்று சேர வாணலியை மூடி, வேக வைத்து இறக்கினால், காளான் பொரியல் ரெடி!!!