FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 19, 2016, 09:54:17 PM
-
மத்தன் சோறு தொகையல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fsl3936.jpg&hash=96678c098773cc1910dbe174aa62f97736e4ddeb)
விதை நீக்கிய மஞ்சள் பூசணி சதைப்பகுதி – 1 கப்,
கடலைப்பருப்பு – 2 1/2 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு – 1 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் வற்றல் – 5,
புளி – சிறிய எலுமிச்சைப் பழ அளவு,
பெருங்காயம் – சிறிய துண்டு,
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப.
தாளிக்க..
எண்ணெய் – 1 டீஸ்பூன்,
கடுகு – 1/2 டீஸ்பூன்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பெருங்காயம் போட்டு பொரிந்ததும், கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு போட்டு வறுக்கவும். பொன்னிறம் வந்ததும் மிளகாய் வற்றலை சேர்த்து அவற்றையும் வறுத்து எடுத்து தட்டில் கொட்டிக்கொள்ளவும். அதே கடாயில் எண்ெணய் ஊற்றி, பூசணியின் சதைப் பகுதியை பச்சை வாடை போகும் வரை வதக்கவும். இதில் புளியை சேர்த்து ஆறவைக்கவும். முதலில் வறுத்த பருப்புகளை அரைக்கவும். பின்பு வதக்கிய பூசணி, புளி, உப்பு சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். தேவையானால் தண்ணீர் ஊற்றி அரைக்கலாம். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து கொதித்ததும் இறக்கி சாதத்துடன் பரிமாறவும்.