FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 18, 2016, 09:21:00 PM

Title: ~ ரவை அப்பம்:செய்வது எப்படி? ~
Post by: MysteRy on January 18, 2016, 09:21:00 PM
ரவை அப்பம்:செய்வது எப்படி?

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2014%2F11%2F%25E0%25AE%25B0%25E0%25AE%25B5%25E0%25AF%2588-%25E0%25AE%2585%25E0%25AE%25AA%25E0%25AF%258D%25E0%25AE%25AA%25E0%25AE%25AE%25E0%25AF%258D-300x225.jpg&hash=4441378c19f9f589a4b0cf6dfca21f59163563a2)

தேவையான பொருட்கள்:

1 சுண்டு ரவை
1 சுண்டுக்கு சிறிதுகுறைவான தேங்காய்ப்பால்
½ செ.மீ. தடிப்பமுள்ள, கரைநீக்கப்பட்ட 1 துண்டு பாண்
1 தேக்கரண்டி உப்புத்தூள்
குவித்து 1 தேக்கரண்டி சீனி
1ஃ4 -1ஃ3 தேக்கரண்டி அப்பச்சோடா
2ஃ3 சுண்டு இளநீர்

செய்முறை:

ரவை, பாண், சீனி ஆகியவற்றை பிளென்டர் அல்லது ஆட்டுக்கல்லில் இட்டு, அதிக அழுத்தமில்லாத தொய்ந்த பதத்தில் அரைத்து, வழித்து, வெக்கையுள்ள இடத்தில் வைத்து, 12 மணிநேரம் புளிக்க விடவும். புளித்தவுடன், தேங்காய்ப்பால், உப்பு, அப்பச்சோடா ஆகியவற்றைச் சேர்த்துக் கரைத்து, செய்முறை 5 இல் கொடுத்துள்ளபடி அப்பத்தைச் சுட்டு நடுக்கவும். இதற்கு நடுவில் பால் விடவேண்டியதில்லை.
சீனிச்சம்பல், பம்பாய் வெங்காயச் சட்னி அல்லது கட்டைச் சம்பலுடன் பரிமாறவும். விரும்பினால், வெண்ணெய், பாணி, ஜாம், இனிப்புச்சட்னி என்பவற்றுடன் பரிமாறலாம்.