FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: ReeNa on January 18, 2016, 12:55:34 PM

Title: நிலா பெண்ணே
Post by: ReeNa on January 18, 2016, 12:55:34 PM
நிலா பெண்ணே

(https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcST4XZmesqdJjYTz38qy5C8PbawFtdM8M42Cde9L0wK44QoZAW2)


வனாந்தரத்தில் ஒரு பாதை கண்டேன்
பாலைவனத்தில் ஒரு நீரூற்றை கண்டேன்
உன் இமைபேசும் விழியில்  காதல் கண்டேன்
என் இதயத்தில் ஒரு வேகம் கண்டேன்

நிலா வெட்கத்துடன் சிரிக்க கண்டேன்
நட்சத்திரங்கள் பூவாய் உதிர கண்டேன்
தென்றல் என்னை தீண்ட  கண்டேன்
இரவு மெல்லிய ராகங்கள் இசைக்க  கண்டேன்

வார்த்தைகள் காதலித்தால் கவிதை பிறக்கும்
ராகங்கள் காதலித்தால் சங்கீதம் பிறக்கும்
பாடல்கள் காதலித்தால் மெல்லிசை  பிறக்கும்
உன்னை காதலித்தால் புது ஜீவன் என்னுள் பிறக்கும்
Title: Re: நிலா பெண்ணே
Post by: CybeR on January 18, 2016, 02:37:31 PM
Nice One Reena
Title: Re: நிலா பெண்ணே
Post by: JoKe GuY on January 18, 2016, 07:00:33 PM
சபாஷ் ரீனா வளரட்டும் உங்களின் படைப்புக்கள்
Title: Re: நிலா பெண்ணே
Post by: Nick Siva on February 04, 2016, 09:03:13 PM
Kavithai arumai thozhiye... nilavai evalao azhaga nenga rasichu nesikureenga nu kavithai la romba azhaga solliteenga reena.... Nilavai nesikum pothu puthu jeevan pirakirathu nu solli irukeenga...adhu nilavin velichama illa nilavin meethana ungal anba? ... enna irunthalum padikura engalukum nilavai rasikkura pola pannitinga super reena... 
Title: Re: நிலா பெண்ணே
Post by: aasaiajiith on February 06, 2016, 03:01:43 PM
வாழ்த்துக்கள் !!
Title: Re: நிலா பெண்ணே
Post by: SweeTie on February 06, 2016, 07:50:46 PM
அருமை....அருமை......வாழ்த்துக்கள்.
Title: Re: நிலா பெண்ணே
Post by: LoLiTa on September 28, 2016, 02:42:36 PM
wow reenu nice kavidhai! Valtukal!
Title: Re: நிலா பெண்ணே
Post by: SarithaN on December 16, 2016, 10:25:19 PM
தங்கைக்கு வணக்கம்,,

நிலா பெண்

வனாந்தரத்தில் பாதை
பாலைவனத்தில் நீர்
இமையில் காதல்மொழி
இதயத்தில் வேகம்! பெண்மையின் நாணமோ?

நிலா வெட்கி சிரிக்க
நடசத்திரம் பூவாக
தென்றல் தீண்டிட
இரவு மெல்லிசையாதல்! காதல் நோயோ!

வார்த்தைகள் மொழியாகி
ராகங்கள் இசையாகி
பாடல்கள் கவியாகி
இத்தகை ரசனை உங்களுள் கவிதாயினி
எனும் கருக்கொள்ளட்டும்.

வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். நன்றி