FTC Forum

தமிழ்ப் பூங்கா => காலக்கண்ணாடி => Topic started by: Global Angel on January 06, 2012, 10:48:45 PM

Title: உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர்
Post by: Global Angel on January 06, 2012, 10:48:45 PM
உலகை இயக்கிய முதல் கம்ப்யூட்டர்


இன்றைக்கு நமது கைகளுக்குள் இருக்கும் ஒரு சின்ன கைப்பேசியில் நவீன கணினியே இயங்குகிறது. அந்தத் தொழில் நுட்பத்தில் மகத்துவத்தையும், உன்னதத்தையும் நம்மில் பலரும் நினைத்துப் பார்ப்பதில்லை. ஏனெனில் அது இன்றைக்கு சந்தையில் எங்கும் கிடைக்கும் சாதாரணப் பொருளாகிவிட்டது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F01.jpg&hash=f4958f370edc765a788aaddcf2edd6cf2e86cc38)


இன்றைக்கு பல வீடுகளில் கணினி, தொலைக்காட்சியைப் போல மிக எளிதாய் நுழைந்து விட்டிருக்கிறது. அலுவலகங்கள், கல்வி நிலையங்கள், விற்பனை வளாகங்கள், வங்கிகள், ஆராய்ச்சிக் கூடங்கள், மருத்துவ நிலையங்கள் என எந்த ஒரு தளத்தை எடுத்துக் கொண்டாலும் கணினி இன்றி ஒரு அணுவும் அசையாது எனும் நிலமை இன்று நிலைபெற்று விட்டது எனலாம்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F02.jpg&hash=413afad65f74015f398287287c50ed050bedc420)


இன்றைக்கு இப்படி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, மிகச் சிறிய அளவில் நமது பைகளில் அமைதியாய் துயிலும் இந்த தொழில்நுட்பத்தின் ஆரம்ப வடிவம் எப்படி இருந்தது ? அதன் பின்னால் நிகழ்ந்த பல்லாண்டு கால உழைப்பு எப்படிப்பட்டது என்பதை பின்னோக்கிப் பார்க்கும் போது வியப்பு மேலிடுகிறது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F03.jpg&hash=c1a35cfc6cdc00e3058de1ef282a6ccf2509851e)

கணினித் துறையின் உயிராதாரமான பணிகளில் ஒன்று மென்பொருள் (கணினியை இயக்குவதற்குத் தேவையான புரோகிராம்கள்) எழுதுவது. இந்த வேலையைச் செய்பவர்களை “கம்ப்யூட்டர் புரோகிராமர்” என அழைக்கின்றனர்.

இப்போது நாம் பார்க்கும் கணினியின் தொடக்கம் சார்லஸ் பாபேஜ் (1791-1871) என்பவரால் உருவாக்கப்பட்டது. கணிதத்தையும் எந்திரத்தையும் இணைத்துப் பகுப்பாய்வுப் பொறி (Analytical Engine) என்ற முதல் கணினியை அவர் உருவாக்கினார்
.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F04.jpg&hash=cf45f36c0b4018cef95e55c7b0a4684d36a2159c)


கணினியின் ஆரம்ப வடிவம் மிகப்பெரிய அறைக்குள் திணிக்கப்பட்ட ஏராளமான இயந்திரங்கள் என்பதே வியப்பூட்டும் உண்மையாகும். அறுபது ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கணினியை வைக்க ஒரு மிகப்பெரிய அறை தேவைப்பட்டிருக்கிறது. இப்போது இருப்பது போல வசதிகள், மானிட்டர், கீபோர்ட் எதுவும் இல்லாத, புள்ளிகளும் கோடுகளும் இணைந்து செயல்பட்ட முதல் கணினியில் எடை ஆயிரம் கிலோ.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F05.jpg&hash=b5263dabb0c2ed41307a9eef1cbda586a5b41389)


அந்தக் கணினியில் வேகமும், விவேகமும் மிகவும் குறைவு. தற்போதைய சாதாரண கணினிகளின் நினைவாற்றல் அந்த முதல் கணினியின் நினைவாற்றலை விட பத்து இலட்சம் மடங்கு அதிகம் என்றால் நினைத்துப் பாருங்கள்.
 
அவருடன் இணைந்து பணியாற்றியவர் புகழ் பெற்ற ஆங்கிலக் கவிஞர் பைரன் என்பவரின் மகளான ‘அகஸ்டா அடா கிங் ‘ என்பவர்


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F06.jpg&hash=dc8b5f5125718b4a02125cd13dd2c438c14fa6e0)


உலகின் முதல் கம்ப்யூட்டர் புரோகிராமர் ஒரு பெண். அவர் “அடா பைரன் லவ்லேஸ்” (1816-1852).
 

புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரான பைரனின் மகள் இவர். மிகச்சிறந்த கணித அறிஞராகவும், இசைக் கலைஞராகவும் திகழ்ந்தார்.
 
தொடக்க கால கணிப்பீட்டுப் பொறிகளான அனலிட்டிக்கல் என்ஜின் மற்றும் டிஃபரன்ஸ் என்ஜினை வடிவமைத்தவர் சார்லஸ் பாபேஜ்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F07.jpg&hash=cd93f8f07f7ba43c80ea18e2ae46dbf5c77345fd)


தன்னுடைய 18 வயதில் பாபேஜ் உடன் சேர்ந்து பணியாற்றினார், அடா. பாபேஜ் “அனலிட்டிக்கல் என்ஜின்” வடிவமைப்பில் ஈடுபட்டபோது அதன் ஆற்றலை மற்றவர்களைவிட மிகச்சரியாக விளங்கிக்கொண்டார். அனலிட்டிக்கல் என்ஜினை இயக்கத் தேவையான புரோகிராம்களையும் எழுதினார்.


கணினிகள் மூலம் இசையமைக்க முடியும் என முன்னறிந்து கூறினார் அடா. கணினித்துறையில் நீங்காத இடம் பெற்றுள்ள இவர், தன்னுடைய 36 வயதில் புற்று நோய் காரணமாக உயிரிழந்தார்.


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F08.jpg&hash=3283025329c8947bfa92060f012510899a73408b)


அவர் நினைவைப் போற்றும் வகையில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை 1980 இல் கணினி நிரல் மொழி (Programme language) ஒன்றுக்கு அடா (ADA) என்று பெயர் சூட்டியது.

பல வருடங்களுக்கு முன்னால் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்றாலும் . இந்த சாதனை அதிகரப்பூர்வமாக 1948ம் ஆண்டு ஜூன் 21ம் தியதி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது .

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F09.jpg&hash=66bedda7b4d6a9a771ef87c2f178fce6996f7fe8)


இந்த முதல் கணினி நிரூபித்த வினாடியே உலகில் மாபெரும் தொழில் நுட்ப, அறிவியல் விஞ்ஞான வளர்ச்சிக்கான முளை விட்ட வினாடி எனலாம். அந்த வினாடியைப் போல உன்னதமான நிமிடம் என் வாழ்வில் வந்ததில்லை என அதைக் கண்டுபிடித்த பேராசிரியர் பிரடி வில்லியம்ஸ் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F10.jpg&hash=5679ad43f778fc764513e4a6415b679404f90ce5)


1948 இல் டிரான்சிஸ்டர் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதுவரை இருந்து வந்த வெற்றிடக் குழலுக்கு (Vacuum tube) விடை தரப்பட்டது; இதன் விளைவாக இரண்டாம் தலைமுறைக் கணினிகள் புழக்கத்திற்கு வந்தன.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F11.jpg&hash=794b242a2fa4990003e646d7119f9afedaccc496)


1958 இல் ஒருங்கிணைச் சுற்றமைப்பு (Integerated cirucuit – IC) கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் மூன்றாம் தலைமுறைக் கணினிகள் வந்தன. இதனால் ஒரு சாதாரணச் சில்லைப் (Chip) பயன்படுத்தி பல கணினிப் பகுதிகளை இணைக்க முடிந்தது. ஒரு இயக்க அமைப்பினைப் (Operating system) பயன்படுத்தி பல நிரல்களை (Programmes) இயக்கும் வாய்ப்பும் உண்டாயிற்று. மேலும் நான்காம் தலைமுறைக் கணினி உருவாவதற்கும் வழி ஏற்பட்டது.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F12.gif&hash=5bae344965dae39aa44b5c60615ac25bc3318841)


1971 இல் இன்டெல் நிறுவனம் கண்டுபிடித்த 4004 சில்லுவில் மையச் செயலகம் (Central Processing Unit – CPU), நினைவகம் (Memory), உள்ளீடு/வெளியீட்டுக் கட்டுப்பாட்டுச் சாதனங்கள் ஆகிய அனைத்தும் இடம்பெற்றன. ஃ 1981 இல் IBM நிறுவனம் தனியாள் கணினியை (Personal Computer – PC) அறிமுகப்படுத்தியது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F13.jpg&hash=59778f27e437defe797c59312f8d5c16e3fbc7ac)


1983 இல் தனியாள் கணினியை அவ்வாண்டின் சிறந்த மனிதனாக ‘டைம்ஸ் ‘ இதழ் தேர்ந்தெடுத்தது.

பரம் 10000 என்னும் கணினி இந்தியாவில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மீக்கணினியாகும் (Super computer).


(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fpanithulishankar.files.wordpress.com%2F2010%2F01%2F14.jpg&hash=1492d6d3b9bcca1104adfc92f45b41e40b429881)


தற்போது அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள மொத்தக் கணினிகளின் எண்ணிக்கை உலகின் மற்ற எல்லா நாடுகளிலுள்ள கணினிகளின் எண்ணிக்கையைவிடக் கூடுதலாகும்.

அந்த முதல் விதை விழாமல் இருந்திருந்தால், அந்த முதல் மூளை எழாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நாம் காணும் பெரும்பாலான வளர்ச்சிகள் சாத்தியமில்லாமல் போயிருக்கக் கூடும்.

பேபி – என பெயரிட்டழைத்து இந்த மகத்தான கண்டுபிடிப்பை நிகழ்த்திய டாம் கில்பர்ன், அடா பைரன் லவ்லேஸ் , சார்லஸ் பாபேஜ் , மற்றும் பிரட்டி வில்லியம்ஸ் இவர்களில் யாருமே இன்று உயிருடன் இல்லை எனினும் அவர்களுடைய பெயர் வரலாற்றில் அழிக்கப்படாத நிலையில் அழுத்தமாக எழுதப்பட்டு விட்டது என்பது மட்டும் யாராலும் மறுக்கமுடியாத உண்மை .
[/b]