FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 09:41:50 PM
-
பொங்கல் ஸ்பெஷல்: கல்கண்டு பொங்கல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fsdwe.jpg&hash=5096971e4d7a19cd29a0ddfaa576953a604a03d9)
தேவையான பொருட்கள்:
பச்சரிசி – 1 கப்
கல்கண்டு – 1 கப்
பால் – 1 கப்
தண்ணீர் – 2 கப்
நெய் – 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை
முந்திரி பருப்பு – சிறிது
காய்ந்த திராட்சை – சிறிது
செய்முறை :
* அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு, அத்துடன் பால், தண்ணீர் சேர்த்து 4 விசில் வரும் வரை வேக விட்டு எடுக்கவும்.
* குக்கரில் ஆவி குறைந்ததும், மூடியைத் திறந்து, வெந்த அரிசியை நன்றாக மசித்து விடவும். அதில் கல்கண்டைச் சேர்த்து (கல்கண்டு
சிறிதாக இருந்தால் அப்படியே சேர்க்கலாம். பெரிதாக இருந்தல் பொடித்து சேர்க்கவும்), மீண்டும் அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
கிளறி விடவும். கல்கண்டு கரைந்து சாதத்துடன் நன்றாகக் கலந்ததும், நெய்யை சேர்த்துக் கிளறி விடவும்.
* முந்திரி, திராட்சை இரண்டையும் சிறிது நெய்யில் வறுத்து பொங்கலில் சேர்க்கவும்.
* கடைசியில் ஏலக்காய் தூளைத் தூவி, நன்றாகக்
கலந்து இறக்கி வைக்கவும்.
கவனிக்க: இனிப்பு குறைவாக வேண்டுமெனில், 3/4 கப் கல்கண்டு சேர்த்தால் போதுமானது.