FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 09:39:46 PM

Title: ~ பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல் ~
Post by: MysteRy on January 15, 2016, 09:39:46 PM
பொங்கல் ஸ்பெஷல்: பால் பொங்கல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fmaxc.jpg&hash=5b52d4683d64d6f596bf45d42c54408f3b1d4edf)

தேவையான பொருட்கள்:

பச்சரிசி – ஒரு கப்
பால் – 1/4 கப்
வெல்லம் – சிறு துண்டு
ஏலக்காய் தூள் – அரை ஸ்பூன்

செய்முறை :

* வெல்லத்தை துருவி கொள்ளவும்.
* ஒரு கப் அரிசி வேகுமளவு பாலும் தண்ணீரும் கலந்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அடுப்பில் ஏற்றவும்.
* அரிசியைக் கழுவி வைத்துக்கொள்ளவும்.
* பால் சேர்ப்பதால் தண்ணீர் பொங்கி வெளிவரும். அந்த நேரத்தில் அரிசியைப் போட்டுக் கிண்டிவிட்டு அது வேகும்வரை இடையிடையே கிண்டிவிட்டு வெந்ததும் அதனுடன் வெல்லம் சேர்த்து நன்றாக அடி பிடிக்கால் கிளறவும்.
* அடுத்து அதில் ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
* வெல்லம் நன்றாக கரைந்து வாசனை வரும் போது இறக்கவும்.
* சுவையான பால் பொங்கல் ரெடி.
* சாமிக்குப் படைக்கும்போது சாதத்தின்மேல் சிறு துண்டு வெல்லம் வைத்து படைப்பாங்க‌. வெறும் பால் பொங்கலுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடும்போது சுவையாக இருக்கும்.