FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 09:30:21 PM

Title: ~ முட்டைகோஸ் முட்டை பொரியல் ~
Post by: MysteRy on January 15, 2016, 09:30:21 PM
முட்டைகோஸ் முட்டை பொரியல்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fmoo.jpg&hash=31fcf89aeb328a5aa2b95803f26a5fc2975d67e5)

தேவையான பொருட்கள் :

முட்டைகோஸ் – கால் கிலோ
முட்டை – 2
வெங்காயம் – 2
தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன
பச்சை மிளகாய் – 2
மிளகாய் வற்றல் -2
கடுகு, உ.பருப்பு – தலா 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா – கால் ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
சீரகத்தூள் – கால் ஸ்பூன்
பெருஞ்சீரகத்தூள் – கால் ஸ்பூன்
மிளகுத்தூள் – கால் ஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு

செய்முறை :

* முட்டை கோஸ், வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முட்டையை சிறிது உப்பு, மிளகுத்தூள் போட்டு அடித்து
வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உ.பருப்பு, வற்றல், கறிவேப்பிலை போட்டு வெடித்ததும் வெங்காயம், பச்சை
மிள்காய் சேர்த்து வதக்கவும்.
* அத்துடன் இஞ்சி, பூண்டு, கரம்மசாலா சேர்த்து வதங்கியதும், நறுக்கிய முட்டைகோஸ் சேர்க்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், சீரகத்தூள், பெருஞ்சீரகதூள் சேர்க்கவும்.
* முட்டைகோஸ் நன்கு வதங்கியதும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
* பின்பு அடித்து வைத்த முட்டையை சேர்த்து நன்றாக பிரட்டி சிறிது மூடி போட்டு வேக விடவும்.
* முட்டைகோஸ், முட்டை இரண்டும் சேர்த்து வரும் போது தேங்காய் துருவல் சேர்க்கவும்.
* கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி பிரட்டி இறக்கவும்.
* சுவையான முட்டைகோஸ் முட்டை பொரியல் ரெடி.
* முட்டைகோஸ், முட்டையும் சேர்ந்து பொரியல் செய்யும் பொழுது சுவை அருமையாக இருக்கும். மூளை பொரியல் போன்று
மணக்கும். விரும்பினால் தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்தும் செய்யலாம். உப்பு அளவாய் போடவும், கொஞ்சம் கூடினால் கூட கடுத்த மாதிரி
இருக்கும். விரும்பினால் கரம் மசாலா, தேங்காய் சேர்க்கவும், சேர்க்காமலும் அருமையாக இருக்கும்.