FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 09:18:08 PM
-
கோதுமை – கொத்தமல்லித்தழை ரொட்டி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fsl3928.jpg&hash=a2fd6d87313bab5c25f23b97ad31a80885a986c7)
கோதுமை மாவு – 1 கப்,
உப்பு – தேவைக்கு,
தனியாதூள் – 1/2 டீஸ்பூன்,
மிளகாய்தூள் – 2 டீஸ்பூன்,
சாம்பார் வெங்காயம் – 1/4 கப் (உரித்தது),
இஞ்சி – சிறிது,
கொத்தமல்லித் தழை – 1 டேபிள்ஸ்பூன் (பொடியாக
அரிந்தது),
எண்ணெய் – தேவைக்கு.
சாம்பார் வெங்காயத்தை ஒன்றிரண்டாக அரைக்கவும். அரைத்த விழுதை கோதுமை மாவில் போட்டு, உப்பு, மிளகாய்தூள், தனியாதூள், இஞ்சி விழுது, கொத்தமல்லித்தழை போட்டு சூடான தண்ணீர் விட்டு சற்று தளற பிசையவும். வாழை இலையில் எண்ணெய் தடவி பிசைந்த மாவை சிறிது எடுத்து லேசாக ரொட்டியாக தட்டி தோசைக்கல்லில் போட்டு சுற்றிலும் எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து சூடாக பரிமாறலாம்.