FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 08:59:11 PM
-
ப்ரைடு ரைஸ்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F07%2FCapture14.jpg&hash=a890269c8a4e8fca88cd98588b34b449373e45ea)
தேவையான பொருள்கள்: –
அரிசி – 2 கப்
கோஸ் – 100 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 100 கிராம்
வெங்காயம் – 2
கொடை மிளகாய் – 1
எண்ணெய் – தேவையான அளவு
அஜினோமோட்டோ – ஒரு ஸ்பூன்
பச்சை மிளகாய் – 3
மிளகு தூள் – 3 ஸ்பூன்
இஞ்சி, பூண்டு விழுது – 1 ஸ்பூன்
முந்திரி – 4
கொத்துமல்லி
செய்முறை:
சாதத்தை பாதி வெந்த நிலையில் வடித்து ஆறவைத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு அது பாதி வதங்கியதும் இஞ்சி,பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும்.
பச்சை வாசனை போக வதக்கியதும் நறுக்கி வைத்துள்ள கோஸ், கேரட், பீன்ஸ், கொடைமிளகாய் என அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.
சிறிது நேரத்தில் அதில் அஜினமோட்டோ, சோயா சாஸ், சிறிது மிளகு தூள் அத்துடன் தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
இந்த கலவையில் வடித்து வைத்திருக்கும் சாதத்தை கொட்டி நன்கு கிளறி விடவும். (ஒரு 5 நிமிடம் மூடி வைக்கவும்)
அடுப்பில் இருந்து இறக்கும் போது முந்திரி, கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
சுவையான ப்ரைடு ரைஸ தயார். தக்காளி சாஸ் வச்சு ஒரு வெட்டு வெட்டுங்க அப்புறம் பாருங்க ஹோட்டலை மறந்துடுவிங்க.