FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 15, 2016, 08:55:54 PM
-
உடல் பருமன் குறைய கொள்ளு சூப் (ரசம்)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F07%2F%25E0%25AE%2595%25E0%25AF%258A%25E0%25AE%25B3%25E0%25AF%258D%25E0%25AE%25B3%25E0%25AF%2581-%25E0%25AE%259A%25E0%25AF%2582%25E0%25AE%25AA%25E0%25AF%258D-%25E0%25AE%25B0%25E0%25AE%259A%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg&hash=969941ec34a1d07e5ad2efce617c6995beec6e07)
தேவையான பொருள்கள்: –
கொள்ளு – 4 ஸ்பூன்
பூண்டு – 5 பல்
தக்காளி – 2
மிளகு – 1 ஸ்பூன்
சீரகம் – 1 ஸ்பூன்
துவரம்பருப்பு – 1 ஸ்பூன்
பெருங்காயம் – 1/2 ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிது
கறிவேப்பிலை – சிறிது
தாளிக்க
நல்லெண்ணெய் – சிறிது
கடுகு – சிறிது
வரமிளகாய் – 2
செய்முறை:
மேலே கூறிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து கொள்ளவும். (ஒரு வாணலியில் எண்ணெய் விடாமல் கொள்ளை சிவக்க வருத்துக்கொள்ளவும்)
அரைத்தக் கலவையில் 5 டம்ளர் (தேவையான) தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்து வைக்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள் போட்டு தாளித்து கரைத்து வைத்த கலவையை ஊற்றி நன்கு கொதிக்க விடவும்.
நன்கு கொதித்ததும் அடுப்பில் இருந்து இறக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து அத்துடன் கொத்தமல்லித்தழை தூவி பறிமாறலாம்.
குறிப்பு
கொள்ளை ஆட்டி பால் எடுத்து ( தண்ணீர்க்கு பதில் ) அதில் சூப் வைத்தால் இன்னும் சுவையாக இருக்கும்.
கொள்ளை அரைத்து பொடி செய்து வைத்துக்கொண்டால் ரசம் வைக்கும் போது பயன்படுத்தலாம்.( நாம் எப்போதும் வைக்கும் ரசத்தில் ஒரு ஸ்பூன் கொள்ளு பொடியை போட்டால் அருமையாக இருக்கும் )