FTC Forum
Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on January 14, 2016, 10:33:11 PM
-
பாட்டி வைத்தியம்....
(https://fbcdn-sphotos-f-a.akamaihd.net/hphotos-ak-xfp1/v/t1.0-9/12510289_1527024447595025_6660154645304532179_n.jpg?oh=9299d80a748cbcc15d46f6375355c9e5&oe=57087C07&__gda__=1460070999_a929a0398ac627aef0f0bc18eea7cfc4)
* கருஞ்சீரம், மல்லி ஆகியவற்றை இடித்து பொடி செய்துக்கொள்ளவேண்டும். அந்த பொடியை பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் அஜீரணம் குறையும்.
* பிரண்டைத் துவையல் செய்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் இரத்த ஓட்டம் சீராகவும், இதயம் பலப்படும்
* இலுப்பை பிண்ணாக்கு, வேப்பம் பட்டை, பூவரசம் பட்டை ஆகியவற்றை சமஅளவு எடுத்து சுட்டு கரியாக்கி அதனுடன் கார்போக அரிசி, மஞ்சள் கலந்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து பூசி வந்தால் கரப்பான், சொறி, சிரங்கு போன்ற தோல் நோய்கள் குறையும்.
* அத்திப்பழம் தினசரி இரண்டு சாப்பிட்டு வந்தால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும் உடல் வளர்ச்சி அடைந்து பருமனைடயும். மலச்சிக்கலை குறையச் செய்யும்.
* போலிக் அமிலப் பற்றாக்குறையால் கருவுற்ற தாய்க்கும், குழந்தைக்கும் உண்டாகும் இரத்த சோகையை போக்க வாழைக்காய் மருந்தாக பயன்படுகிறது
* உளுந்தை தோலுடன் கஞ்சி அல்லது களி செய்து சாப்பிட்டு வந்தால் இடுப்பு எலும்பு வலிமை பெறும். இது நரம்புகளை பலப்படுத்தும். நீரிழிவை கட்டுப்படுத்தும்
* காரட்டை சுத்தம் செய்து அரைத்து சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றில் பத்து மிளகு, தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும்.
* சுக்கான் கீரையை சுத்தம் செய்து பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி அரைத்து சட்னி போல செய்து உணவுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தி அதிகரித்து பசியின்மையை குறைய செய்யும்.