FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 14, 2016, 10:29:29 PM
-
பூண்டுப்பொடி.. செய்வது எப்படி?
(https://fbcdn-sphotos-d-a.akamaihd.net/hphotos-ak-xtp1/v/t1.0-9/12494739_1527022874261849_7369426043567147432_n.jpg?oh=21f8150b9748cd41c65f4192112f6a02&oe=5745D41C&__gda__=1463942458_d4612958832dea703d8406b98bf85e6e)
தேவையானபொருட்கள்:
பூண்டு – 250 கிராம்
காய்ந்த மிளகாய் – 10
உளுத்தம்பருப்பு – ஒரு கப்
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பூண்டை தோல் உரிக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, பூண்டை சேர்த்து மொறுமொறுப்பாக வரும் வரை வறுக்கவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாயை தனித்தனியாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவும்.
பூண்டுடன் மிளகாய், உளுத்தம்பருப்பு, உப்பு சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
குறிப்பு:- பூண்டு, வாயுத் தொல் லையை நீக்கும். இதய நோயாளி களுக்கு மிகவும் பயன்தரக் கூடியது.