FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 14, 2016, 08:10:17 PM

Title: ~ புளியானம் ~
Post by: MysteRy on January 14, 2016, 08:10:17 PM
புளியானம்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-_TLxToRhCqQ%2FVpTow8asviI%2FAAAAAAAAQhg%2F0TDGlSQX4F4%2Fs400%2F19.jpg&hash=0a3eba24b1f3bcf136f90e70ac1d5b3e68b7ebe0)

தேவையானவை:

கெட்டி புளிக்கரைசல் - அரை கப், சீரகம் -  ஒரு ஸ்பூன், அரிசி மாவு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 2 ஆர்க்கு, தோலுரித்த சின்ன வெங்காயம் - ஒரு கப், கெட்டி தேங்காய்ப்பால், 2-ம் தேங்காய்ப்பால் - தலா ஒரு கப், தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தேங்காய் எண்ணெயை சூடாக்கி... சீரகம், கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும். சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி,  புளிக்கரைசல் சேர்த்துக் கொதிக்கவிடவும். இதனுடன், 2-ம் தேங்காய்ப்பால் சேர்க்கவும். பிறகு, முதல் தேங்காய்ப்பால், அரிசிமாவு சேர்த்து... சற்றே இறுகி, கூட்டு போல வரும் வரை கைவிடாமல் கிளறவும். உப்பு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

இது ஒரு ஸ்ரீலங்கா டிஷ் ஆகும். சப்பாத்தி, தோசையுடன் சைட் டிஷ்ஷாக சாப்பிடலாம்.