FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on January 14, 2016, 07:45:55 PM
-
எலெக்ட்ரானிக் பொருட்கள்... சர்வீஸ் செய்வது எப்படி..?
ஆலோசனைசமீபத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய மாவட்டங் களில் பெய்த மழையின் பாதிப்பால் பல வீடுகளில் வீட்டு உபயோகப் பொருட்கள் பழுதாகியிருக்கும். மேலும் சுவரில் வழிந்த மழை ஈரத்தால் செயல்பாடு பாதிக்கப்பட்ட ஏ.சி, குளிரில் ஃப்ரீஸரில் உறைந்த ஐஸால் ஸ்டக் ஆன ஃப்ரிட்ஜ் என, பருவநிலை காரணமாகவும் எலெக்ட்ரானிக் பொருட்களில் பிரச்னைகள் ஏற்படும் சீஸன் இது. அவற்றை சர்வீஸ் செய்யும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே....
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F1.bp.blogspot.com%2F-q6zEGtSv0O8%2FVpTjwVCUvFI%2FAAAAAAAAQgY%2FF_NpzT-QkYQ%2Fs640%2F11.jpg&hash=3665c8f5177d203f6c67c6c9f1f5a6e967196954)
ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏ.சி, கிரைண்டர் போன்ற விலை உயர்ந்த பொருட்களை பிரபலமான பிராண்டுகளில்தான் வாங்குவோம். அந்தப் பொருட்கள் பழுதாகும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் சர்வீஸ் செய்வதே நல்லது. ஏனெனில், பழுதடைந்த பொருளில் ஏதாவது உதிரிப்பாகங்கள் வீணாகி இருந்தால், அதன் ஒரிஜினல் பாகங்களை மாற்ற கம்பெனியே வசதியாக இருக்கும். வீட்டுக்கு அருகில் உள்ள எலெக்ட்ரிக்கல் கடைகளில் பழுதுபார்த்தால், ஒரிஜினல் பாகங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும்.
பிராண்டட் பொருட்களைப் பொறுத்தவரை, எந்தப் பொருளை சர்வீஸ் செய்ய வேண்டுமென்றாலும் முதலில் அதை அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் தெரியப்படுத்துவது நல்லது.
பிறகு, நிறுவனத்தின் சார்பாக சர்வீஸ் செய்ய வரும் நபரிடம் சாதனத்தில் என்ன பிரச்னை, அதைச் சரிசெய்ய எவ்வளவு செலவாகும் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்ளவும். மீண்டும் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு, சாதனத்தில் உள்ள பிரச்னையைத் தெரிவித்து, அதற்கு எவ்வளவு கட்டணம் என்பதைக் கேட்டு தெரிந்துகொள்வது புத்திசாலித்தனம். ஏனெனில், சில நேரங்களில் சர்வீஸ் செய்ய வரும் நபர், நிறுவனம் நிர்ணயித்ததைக் காட்டிலும் அதிகத் தொகை வசூலிக்க வாய்ப்புள்ளது.
சர்வீஸ் முடிந்த பிறகு அது தொடர்பான ரசீதை வாங்கி வைத்துக்கொள்ளவும். அந்த ரசீதில், என்ன சாதனம், எந்தப் பிரச்னைக்காக சர்வீஸ் செய்யப்பட்டது, அதற்காக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது போன்ற விவரங்களைக் குறிப்பிட்டு வாங்குவது முக்கியம்.
ரசீதில் சர்வீஸ் செய்யப்பட்ட பொருளின் சீரியல் நம்பர் குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதையும், அந்த எண் சரியாக உள்ளதா என்பதையும் மறக்காமல் சரிபார்க்கவும்.
ஒருவேளை அதே சாதனத்தில் மீண்டும் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், அது குறித்து புகார் அளிக்க இந்த ரசீது அவசியம்.
வீட்டு உபயோகப் பொருட்களில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், வீட்டில் பல வேலைகள் முடங்கும் என்பதால், உடனடியாக சர்வீஸ் செய்துவிடுவது டென்ஷனைக் குறைக்கும்; சர்வீஸ் செய்யும்போது மேற்சொன்ன விஷயங்களில் கவனமாக இருப்பது வீண் செலவைக் குறைக்கும்.