ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 087
இந்த களத்தின்இந்த நிழல் படம் *MyNa*அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை வியாழக்கிழமை (21.01.2016) GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F087.png&hash=e5942dea8004487d6edb1b996d4c946872406c9b)
காதல் உலகத்தையே ஆட்டி படைக்கும்
அற்புத உணர்வு பூர்வமான வார்த்தை
அதன் பொருள் உணர்ந்து
காதல் கொள்வோர் எத்தனை பேர்...
பார்த்ததும் சிலாகித்து வரும் அந்த உணர்வு
ஏன் தொடர்ந்து நிலைப்பது இல்லை ....
பார்த்ததில் வந்த ஈர்ப்பு
புரிதலில் இல்லையா ...
உன்னை புரிந்து கொள்ள
எனக்கு வருடங்கள் சிலது ஆகுமோ?
அல்லது புரியாமலே போய் விடுவேனோ !
சிறு பிள்ளையாய் நான் மனதுக்குள்
எழுப்பிய ஆசை கோட்டையை,
அவசர பேச்சால் இடித்து விடாதே ...
என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடு .
என்னை பேச விடு.
தவறு என்னுடையதாகவே
இருக்குமாயின் என் தவறுகளை திருத்தி எடு ..
அதை விடுத்து என்னை
விட்டு விலகாதே....
வாழ்க்கையை காதலோடு
வாழ எனக்கு கற்று கொடு ..
உனது அன்பில் என்னை தோய்த்து எடு ...
எனக்கு வாழ்க்கையில்
கிடைத்த பொக்கிஷம் நீ ..
என்னோடு பழகி பார் ..
அன்பை நிலைத்திட செய்து
வாழ ஒரு சந்தர்ப்பம் கொடு
வாழ்க்கை எவ்வளவு இனிமையானது
என்று அப்போது உணர செய்வேன் ...
எனக்குள் ஒரே ஆசை தான்
மனிதன் மரிக்கும் தருவாயில்
அவனது சிறு மூளை கடைசி 3நிமிடம்
அவன் வாழ்கையை முழுவதுமாக
அசைபோட்டு நிற்குமாம்..
அது நிஜம் என்றால்
என் சிறுமூளை உச்சரிக்கும்
கடைசி வார்த்தை
உன் பெயராக இருக்கட்டும்
காதலோடு ...