FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Software on January 12, 2016, 02:04:19 AM

Title: சாவடிக்கும் உன் நினைவுகள்
Post by: Software on January 12, 2016, 02:04:19 AM
அன்பே...

என்னை முதன் முதலில்
நேசித்தவளும் நீதான்...

என்னில் முதன்முதலில்
நான் சுமந்தவளும் நீதான்...

பாதை இல்லாத கானகத்தில்
திசை தெரியாத பறவை நான்...

துடிக்கும் என் இதயம்
ஊமையாகிவிட்டது...

நீ என்னை
அந்த பிரிந்த நிமிடம்...

வலிகளோடு சொல்கிறேன்...

முயற்சி செய்தும் முடியவில்லையடி
உன்னைவெறுக்க...

உன்னை நேசித்திருந்தால்
நான் மறந்திருக்கலாம்...

உன்னை நான் சுவாசிக்கிறேனடி
எப்படி மறக்க முடியும் உன்னை...

என்னோடு நீ வாழவேண்டாம்
என் இதயத்தில் நீ வாழ்ந்துவிடு...

நான் வாழும்வரை
என் வாழ்விற்கு அதுபோதுமடி...

உதிர்ந்துவிட்ட
என் வாழ்வில்...

உன் நினைவுகள்தான்
எனக்கு சிறு வெளிச்சமடி...

வைத்துகொள்கிறேன் உன்
நினைவுகளை என்னோடு மட்டும்.....
Title: Re: சாவடிக்கும் உன் நினைவுகள்
Post by: CybeR on January 18, 2016, 01:55:15 AM
Sooper Da mama Saraku Adi Seri Agum Yellam :D