FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 11, 2016, 09:59:14 PM
-
கிச்சன் கைடு!
மழை மற்றும் குளிர் காலங்களில் புளி பிசுபிசுப்பாகவோ அல்லது ஈரமாகவோ இருக்கும். இதைத் தடுக்க, தையல் இலைகளில் புளியை வைத்தால், இந்தப் பிரச்னை வராது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-0YklDazX8Zg%2FVpOZo0v88nI%2FAAAAAAAAQew%2FbZhFx9f9IqY%2Fs1600%2F24.jpg&hash=6770fe50d96b02ce02a1b4dca3b435a36b8b21e8)
உருளைக்கிழங்கை வெளியில் ஒரு வாரம் வைத்தாலே முளைவிட ஆரம்பிக்கும். இதைத் தடுக்க, உருளைக்கிழங்குகளின் நடுவே ஒரு ஆப்பிளை வைத்தால் உருளைக்கிழங்கு முளை விடாது.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-n3-p7iPDNq0%2FVpOZxsYV09I%2FAAAAAAAAQe4%2FHO9hJq90s-0%2Fs1600%2F25.jpg&hash=9c9163891916955e9cd0607cf1dfdb3c8d314b81)
தோசை மாவில் உளுந்து அதிகமாகிவிட்டால், கல்லில் தோசை ஒட்டிக்கொள்ளும். அந்த சமயங்களில், தோசை மாவில் சிறிது ரவையைக் கலந்து தோசை சுட்டால், தோசைக் கல்லில் ஒட்டாது
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-9Vel85BnGIQ%2FVpOZ5APmyTI%2FAAAAAAAAQfA%2Fa_uJM7BNUyg%2Fs1600%2F26.jpg&hash=d55ad88a83d0b67b64227562b6acfdff46d697a6)