FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 10, 2016, 09:43:21 PM

Title: ~ முட்டை புர்ஜி ~
Post by: MysteRy on January 10, 2016, 09:43:21 PM
முட்டை புர்ஜி

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F09%2Fegg-bhurji.jpg&hash=de2c0604470bb3f3befff0704efd7c43e711e972)

தேவையான பொருட்கள் :

முட்டை – 4 (வெள்ளை கரு மட்டும்)
தக்காளி – 2
வெங்காயம் – 2
ப.மிளகாய் – 2
இஞ்சி – 1 துண்டு
கொத்தமல்லி – சிறிதளவு
தக்காளி சாஸ் – 2 ஸ்பூன்
கரம் மசாலா – அரை ஸ்பூன்
மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை சிட்டிகை
சாட் மசாலா – 1 ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை :

• தக்காளி, வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
• முட்டையில் இருந்து வெள்ளைக்கருவை தனியாக எடுத்து வைக்கவும்.
• அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வெங்காயம், ப.மிளகாய் போட்டு நன்றாக வதக்கவும்.
• நன்கு வதங்கிய பின்னர் இஞ்சி சேர்த்து வதக்கி தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
• அடுத்து  அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், சேர்த்து வதக்கிய பின் தக்காளி சாஸ் சேர்த்து நன்றாக கிளறவும்.
• இப்போது உப்பு சேர்த்து கிளறிய பிறகு முட்டையை ஊற்றி நன்றாக கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்).
• முட்டை நன்றாக வெந்து உதிரியாக வரும் போது கரம் மசாலா தூள் தூவி இறக்கவும்.
• இந்த  முட்டை புர்ஜியை தோசை, சாண்விச், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.
• முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சேர்ப்பதால் டயட்டில் இருப்பவர்கள் இதை சாப்பிடலாம். மற்றவர்கள் மஞ்சள் கருவை சேர்த்து சமைக்கலாம்