Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 09, 2016, 08:39:50 PM
Title: ~ கத்திரிக்காய் தீயல் சமையல் ~
Post by: MysteRy on January 09, 2016, 08:39:50 PM
கத்திரிக்காய் தீயல் சமையல்
தேவையான பொருட்கள்
கத்திரிக்காய் (சிறியது)- 4 எண்ணம் சின்ன வெங்காயம் – 10 எண்ணம் வத்தல் பொடி – 1 தேக்கரண்டி கொத்தமல்லித் தூள் – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் – ½ தேக்கரண்டி பொடித்த மிளகு – ½ தேக்கரண்டி புளிக்கரைசல் – ½ கப் கடுகு – 1 தேக்கரண்டி தேங்காய் (துருவியது) – 1 கப் வெந்தயம் – 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி கறிவேப்பிலை உப்பு தேவைக்கு ஏற்ப மிளகாய் வற்றல்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதில் துருவிய தேங்காயைப் போட்டு சிவந்ததும் சிறிது வெந்தையத்தைப் போட்டு கிளறவும். இப்போது கொத்தமல்லித் தூள், மிளகாய் தூள், பொடித்த மிளகு மற்றும் மஞ்சள் தூளைப் போட்டு நன்கு கிளறவும். இப்போது சின்ன வெங்காயத்தைப் போட்டு மேலும் கிளறி விடவும். இவை யாவற்றையும் சேர்த்து விழுதாக அரைத்து பக்கத்தில் வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தை எடுத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். அதனுள் கத்திரிக்காயை சிறிதாக வெட்டி போட்டு அதோடு சின்ன வெங்காயத்தையும் போட்டு நன்கு கிளறி விடவும். பின்னர் பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும். இப்போது மூடியை எடுத்து விடலாம். சிறிது கிளறிவிட்டு மறுபடியும் பாத்திரத்தை மூடி வைத்து சிறிது நேரம் வேக விடவும். மூடியைத் திறந்து புளிக்கரைசல் மற்றும் அரைத்த விழுதினையும் அதனோடு சேர்க்கவும். கொதிக்க விட்டு அதனோடு சிறிது தண்ணீர் சேர்க்கவும். சிறிது உப்பு போட்டு மறுபடியும் கிளறி விடவும். இப்போது தீயல் தாளிப்பதற்குத் தயாராக உள்ளது. பாத்திரத்தில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடக்கி, அதோடு சிறிது கடுகு, மிளகாய் வற்றல் கறிவேப்பிலை போட்டு கடுகு பொரிந்ததும் அதனைத் தீயலின் மீது கொட்டவும். இதனைச் சூடாக பரிமாறவும்.
Title: Re: ~ கத்திரிக்காய் தீயல் சமையல் ~
Post by: Nick Siva on January 09, 2016, 08:52:16 PM