FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on January 09, 2016, 01:20:48 PM

Title: என்ன சொல்ல போகிறாய் ???
Post by: aasaiajiith on January 09, 2016, 01:20:48 PM
காற்றைச் சலவை செய்திடவோ
நடையாய் நடை நடந்து
மூச்சிரைக்க பேசினாய் நேற்று ...

பேச்சின் இடைவெளிப்பட்ட நின்
மூச்சுக்காற்றதுவும் எனை முழுதாய்
மூளைச்சலவை செய்துவிட்ட
சேதி அறிவாயோ ?

எங்கோ எப்பொழுதோ தப்பித்தவறி
திட்டுத்திட்டாய் சுவைத்து வந்த
மூச்சமிழ்ததை போதும்போதுமென
திக்குமுக்காடி திண்டாடிடும்படி
சுவாசித்திடும் வாய்ப்பு வழங்கியமைக்காய்

அம்மொட்டை மாடிக்கு
பட்டமிட்டு
பட்டாடை போர்த்தி
பட்டயம் வழங்கிடவா ?

அன்றி,
அழகிய அம்மாலைவேளைக்கு
மாலை மரியாதையென
முறையாய் முறை செய்து
காசோலை கைதரவா ??

என்ன சொல்ல போகிறாய் ???
Title: Re: என்ன சொல்ல போகிறாய் ???
Post by: SweeTie on January 10, 2016, 04:44:51 AM
வாழ்த்துக்கள்  மட்டுமே  சொல்கிறேன் ... வேறு எதுவுமே சொல்லமாட்டேன் .  :) :)
Title: Re: என்ன சொல்ல போகிறாய் ???
Post by: aasaiajiith on January 11, 2016, 05:53:16 PM
சொல்லாதே சொல்ல சொல்லாதே
சொல்லாது தள்ளி செல்லாதே !!


வந்து
வாசித்து
வாழ்த்து
வழங்கிய
வள்ளல்களுக்கு
நன்றி !!