FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 09, 2016, 12:29:58 PM
-
பருப்புப்பொடி… செய்வது எப்படி??
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fparu.jpg&hash=17639d091a5b769d9ea72e5e0b7011672a6c0e88)
தேவையானவை :
துவரம்பருப்பு – 2 கப்
கடலைப்பருப்பு – ஒரு கப்
காய்ந்த மிளகாய் – 6
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
வாணலியில் துவரம்பருப்பை பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
கடலைப்பருப்பையும் பொன்னிறமாக வறுக்கவும்.
மிளகு, காய்ந்த மிளகாயையும் வறுக்கவும்.
எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து தேவையான உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து, மிக்ஸியில் அரைக்கவும்.
குறிப்பு: எண்ணெய் விட்டு வறுக்கக்கூடாது. இந்தப் பொடியை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்து இரண்டு மாதம் வரை வைத்து உபயோகப்படுத்தலாம். சூடான சாதத்தில் பருப்புப்பொடியைப் போட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டுப் பிசைந்து சாப்பிட… சுவை அசத்தலாக இருக்கும்.