FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 07, 2016, 08:23:20 PM

Title: ~ சம்பா கோதுமை புலாவ் ~
Post by: MysteRy on January 07, 2016, 08:23:20 PM
சம்பா கோதுமை புலாவ்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fddd.jpg&hash=53e0c09b74e431dbb26aad3bd78175feaffb6f6e)

தேவையான பொருட்கள்:

சம்பா கோதுமை ரவை – 2 கப்,
கேரட், குடமிளகாய், காலிஃப்ளவர், பச்சைப் பட்டாணி (எல்லாம் சேர்த்து) – ஒன்றரை கப்,
வெங்காயம் – 1,
பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு – தலா ஒன்று,
பிரியாணி மசாலா – அரை டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:

* கேரட்டை நீளவாக்கில் மெலிதாக நறுக்கி கொள்ளவும்.
* பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.
* வெங்காயம், காலிஃப்ளவரை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* சம்பா ரவையுடன் உப்பு சேர்த்து, தண்ணீர் விட்டு, பொலபொலவென்று வேக வைத்துக் கொள்ளவும்.
* வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயம், காய்கறிகள், வேகவைத்த பச்சைப் பட்டாணி சேர்த்து, உப்பு, பிரியாணி மசாலாவையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இதனுடன் பொலபொலவென்று வெந்த ரவையை சேர்த்து நன்கு கிளறி இறக்கிப் பரிமாறவும்.
* சுவையான சத்தான சம்பா கோதுமை புலாவ் ரெடி. பலன்: இது… கார்போஹைட்ரேட், விட்டமின் சத்து நிறைந்தது.