FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 06, 2016, 09:02:57 PM

Title: ~ முட்டை மசாலா பிரட் டோஸ்ட் ~
Post by: MysteRy on January 06, 2016, 09:02:57 PM
முட்டை மசாலா பிரட் டோஸ்ட்

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2016%2F01%2Fsuvai.jpg&hash=d710fbf17408654a2bd9764fab5df1c1e2e0a4ee)

தேவையான பொருட்கள்:

கோதுமை பிரட் துண்டுகள் – 8
வெங்காயம் – 1
தக்காளி – 1/2
பச்சை மிளகாய் – 1
முட்டை – 3
மிளகு தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
தக்காளி சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

* தக்காளி, வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* முதலில் முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி, நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
* சிறு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கிய அதில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி, நன்கு கிளற வேண்டும்.
* பின்பு உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து கிளறி, அடுப்பை அணைத்து விட வேண்டும்.
* பிறகு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, காய்ந்ததும், பிரட்டில் வெண்ணெய் தடவி டோஸ்ட் செய்ய வேண்டும்.
* பின் செய்து வைத்துள்ள மசாலாவை டோஸ்ட் செய்த ஒரு பிட்டின் மேல் வைத்து, அதன் மேல் மற்றொரு பிரட்டை வைத்து பரிமாற வேண்டும்.
* சுவையான மசாலா பிரட் டோஸ்ட் ரெடி!!!