FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 06, 2016, 08:14:54 PM
-
கொண்டைக்கடலை பிரியாணி
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fmmimages.maalaimalar.com%2FArticles%2F2015%2FAug%2Fb838ea70-4c98-476d-bbb9-f64e975aa682_S_secvpf.gif&hash=7193a2e8a3d843329ddbea7b0947f66e9c82e321)
தேவையான பொருட்கள் :
கொண்டைக்கடலை – 1/2 கப்
பாஸ்மதி அரிசி – 2 கப்
தயிர் – 1/2 கப்
வெங்காயம் – 1 பெரியது
இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜை கரண்டி
புதினா, கொத்தமல்லி – 1 கைபிடி அளவு
எலுமிச்சை சாறு – 1 மேஜை கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தே.கரண்டி
மிளகாய் தூள் – 1 தே.கரண்டி
பிரியாணி மசாலா – 1/2 தே.கரண்டி
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் + நெய் – 1 மேஜை கரண்டி
பட்டை – 1,
கிராம்பு – 2,
பிரியாணி இலை – 1
செய்முறை :
• வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.
• கொண்டைக்கடலை 5 மணி நேரம் ஊறவைத்து குக்கரில் போட்டு 5 விசில் வரும் வரை போட்டு வேகவைத்து கொள்ளவும்.
• குக்கரில் எண்ணெய், நெய் ஊற்றி பட்டை, கிராம்பு, பிரியாணி இலை போட்டு தாளித்து அத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து வதங்கிய பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
• இத்துடன் வேகவைத்துள்ள கொண்டைக்கடலை போட்டு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், பிரியாணி மசாலா நன்றாக சேர்த்து கிளறவும்.
• பிறகு தயிர் சேர்த்து நன்றாக கிளறி 2 நிமிடங்கள் வதக்கிய பிறகு அரிசியினை கழுவி தண்ணீர் இல்லாமல் இதில் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
• இத்துடன் நறுக்கிய புதினா, கொத்தமல்லி மற்றும் 4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். கொதிவந்தவுடன் குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேகவிடவும்.
• குக்கரில் பிரஸர் அடங்கியதும் அதனை திறந்து அத்துடன் 1 தேக்கரண்டி நெய், எலுமிச்சை சாறு ஊற்றி ஒரு கிளறிவிடவும்.
• சுவையான சத்தான கொண்டைக்கடலை பிரியாணி ரெடி. இதனை ராய்தா, உருளை வறுவல், சிப்ஸ் போன்றவையுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்