FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 06, 2016, 08:06:30 PM
-
முருங்கைக்காய், மொச்சைக் குழம்பு
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fvijaytamil.net%2Fwp-content%2Fuploads%2F2015%2F08%2Fmaxresdefault1.jpg&hash=14bfc5a70531a37c068ffa21c5f186ccd31cb74e)
மொச்சை – 2 கப்,
கத்தரிக்காய் – 1/2 கிலோ,
சின்ன வெங்காயம் – 100 கிராம்,
தக்காளி – 3,
முருங்கைக்காய் – 4,
புளி – எலுமிச்சை அளவு,
மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,
தனியாத்தூள் – 3 டீஸ்பூன், உப்பு,
மஞ்சள் தூள் – தேவைக்கேற்ப.
தாளிப்பதற்கு:
எண்ணெய் – 1/2 கப்,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
கறிவேப்பிலை – சிறிதளவு,
வெந்தயம் – 1/2 டீஸ்பூன்.
எப்படிச் செய்வது?
மொச்சையை சிறிது வறுத்து முதல் நாள் இரவே தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் தண்ணீரை வடித்து குக்கரில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து மொச்சை முழுகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிப்புப் பொருட்களை தாளித்து வெங்காயம், மிளகாய் தூள், தனியாத் தூள், மஞ்சள் தூள், புளி மற்றும் நறுக்கிய கத்தரிக்காய், முருங்கைக்காய், தக்காளி சேர்த்து நன்கு சுருள வதக்கி தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடுங்கள். நன்கு கொதித்து சுண்டி வரும்போது இறக்கி விடவும். இது ஆடிக் கூழுக்கு நல்ல காம்பினேஷன்.