FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on January 06, 2016, 07:33:06 PM
-
தக்காளி குழம்பு
(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xfa1/v/t1.0-9/71867_1525505934413543_2151738895072801506_n.jpg?oh=193de527eac491c319012f2dbf4f3f72&oe=57168770&__gda__=1464109765_6b4bacece8d6f8083b4df3add1c8a880)
தேவையான பொருட்கள் :
தக்காளி – 2
பெரிய வெங்காயம் – 1
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் – இரண்டு தேக்கரண்டி
தாளிக்க :
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு – தேவையான அளவு
கறிவேப்பிலை, உப்பு- கொஞ்சம்
செய்முறை :
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
* வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைவாக வந்ததும் மஞ்சள் தூள் சேர்த்து மிளகாய் தூள் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* மிளகாய் வாசம் போனதும் அடுப்பை நிறுத்தவும்,,(தேங்காய் சோம்பு சேர்த்து அரைத்தும் சேர்க்கலாம்)
* மிகவும் ஈசியாக செய்யகூடிய தோசை மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட தக்காளி குழம்பு ரெடி