FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: SweeTie on January 05, 2016, 08:59:59 AM
-
காற்றிலே பறந்து வந்து உன் ''
கண்களில் துயில் கொள்ளவேண்டும்
காலாற நடக்கவேண்டும் உன்
தோளோடு தோள் சேர்த்து
மூங்கில் காற்றிலே வரும் உன்
மூச்சு சுவாசத்தை
உள்வாங்கி உணரவேண்டும் உன்
நிழலோடு என் நிழல் சேர்த்து
ஒன்றாகி உன்னுள் மறையவேண்டும் உன்
அறிவென்னும் அகராதியில்
முதலெழுத்து எனதாயிருக்கவேண்டும் உன்
கனவிலும் நினைவிலும் நீ
கொடுக்கும் கரும்பான முத்தங்கள்
மாற்று குறையாமல் இருக்கவேண்டும்
வாழ்வில் பிரிவென்னும் சொல்லை நாம்
நினைக்காமல் இருக்கவேண்டும்.
-
அழகான வரிகள் தோழி :) :)
உங்கள் காதலுக்குரியவர் மிகவும் கொடுத்துவைத்தவர் தான் போங்க!.... :) :)
-
மிக அருமையாக இருக்கிறது.வாழ்த்துக்கள்
-
vaahvil pirivendra sollai naam ninaikamal irukka vendum ... sweetie semmaya irukku :P
-
ingu kathalil unnai minja ver oruvar illai sweetie, vaazhatum unn kadhal valaratum unn kavidhaigal :) :) :)
-
தோழர்கள் மாறன் ஜோக் ராம் அனோனி நன்றிகள் பல.
உங்கள் வாழ்த்துக்கள் எங்களை வாழ வைக்கும்.
-
எழுத்துப்பிழைகளில் கூடுதல் கவனம் கொள்ளவேண்டும் !!
வாழ்த்துக்கள் !!
-
என் கண்களுக்கு எழுத்து பிழைகள் எதுவும் தெரியவில்லை. நீங்கள் நக்கீரர் பரம்பரையில்
உள்ளவர் போல் தெரிகிறதே. எவ்விடத்தில் பிழை என்று சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன் . நன்றி வணக்கம்.
-
கமுக்கமாய் திருத்தம் புரிந்துவிட்டு
உறுத்தம்(ல்) கொள்வதை தவிர்ப்பதாய்
சற்றே சாமர்த்தியமாய் நிறுத்தம் புரிந்து
பொருத்தமாய் எனை வருத்திட
நக்கீரர் பரம்பரை என்று உரைத்தது
வருத்தம் ....
-
சூட்சுமம் தெரிந்த சகுனி
கமுக்கமாய் பகடையை
அமுக்கும் சாமர்த்தியம்
கண்டீரோ !!!
நக்கீரா வருந்தாதே!!! எல்லாம் சுபமே !
;D ;D ;D
-
சாபமாய் இருந்திடுமோ என அஞ்சி அணுகிட துஞ்சியவனுக்கு
சுபமே எனும் குறிப்பு லாபமே !!
-
நான் பிறந்த இந்த புனித நாளில் உங்களை சபமிடுவேனா???
உங்களுக்கு லாபம் கிடைத்ததில் எனக்கு ரெட்டிப்பு மகிழ்ச்சி.
-
காலம் கடந்திடினும் ...இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் !!
-
காலம் கடக்கவில்லை உரிய
நேரத்தில் வாழ்த்தி என்னை
உள்ளம் குளிர வைத்த உங்கள்
அன்புக்கு நன்றி நன்றி நன்றி
-
அதுசரி ,
நன்றி நன்றி நன்றி
என்றுரைப்பதை நோக்கிடின்
தந்தையோ, தமையனோ , தானே தானோ
நீதித்துறையில் நீதிபதியோ ??
-
பழக்கதோஷமும் ஜலதோஷமும் அக்காவும் தங்கையும்.
தொட்டவனை விட்டுப் பிரிய மாட்டார்கள்
-
துளியும் புரியாத தெளிவான ஒரு விளக்கம் !!
-
Nice Kavitha Jo...Neenga Solaa Vanda Mater Semma ..Kalakunga ...Hapy Journey :D