(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-M8MXngnumcE%2FVooNDzPl9BI%2FAAAAAAAAQb0%2FLaIJJQA_30Q%2Fs640%2F14.jpg&hash=4b69fdbc686803e15d1e57803ea2deba9e644e9a)
நாக்குக்கு அடிமையாகிப்போன தலைமுறை நாம். பெரியவர்களேகூட குழந்தைகளைப் போல ‘எனக்கு பீட்ரூட் பிடிக்காது’, ‘பாகற்காய் பிடிக்காது’ என்கிறார்கள். பிடிக்கும், பிடிக்காது என்பதைவிட, காய்கறி உடலுக்கு மிகவும் நல்லது, அவசியமானது என்ற எளிய புரிதல் இருந்தால் போதும், ஆரோக்கியத்துக்கு நம்மைப் பிடித்துவிடும். `தினசரி உணவில் அதிக அளவில் பச்சைக் காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு வழிவகுக்கும்’ என்கின்றனர் மருத்துவர்கள். கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளைத் தவிர்த்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைந்த காய்கறிகளைச் சேர்த்துக்கொள்வதன் மூலம், உடல்பருமன், சர்க்கரைநோய், இதய நோய்கள் உள்ளிட்டவற்றைத் தடுக்க முடியும்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2016%2F01%2Fzmziyt%2Fimages%2Fp70a%25281%2529.jpg&hash=81cfc41929691a848aee485264427241f3876e78)
இன்றைக்குக் கிடைக்கும் காய்கறிகள், பூச்சிமருந்து, ரசாயன உரங்கள் கொண்டவையாக இருக்கின்றன. காய்கறிகளை உப்பு, மஞ்சள், புளி கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊறவிட்ட பின் அலசி, பாதுகாப்பான முறையில் சமைத்துச் சாப்பிட்டால், அதில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளின் வீரியம் குறையும். இன்சுலின் ஊசி, கசப்பு மிகுந்த மாத்திரை, மருந்துகளைவிட பாகற்காயும் வாழைப்பூவும் எவ்வளவோ சிறந்தவை. நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகளின் பலன் அறிந்து சாப்பிட்டாலே, நோய்கள் நம்மை நெருங்காது. நீர்க் காய்கள், நார்க் காய்கள், மாவாக இருக்கும் கிழங்கு என ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுவை. அதுபோலவே அதன் பலன்களும் ஒவ்வொரு விதம். எந்தக் காயில், என்னென்ன சத்துக்கள் உள்ளன, அவற்றின் பலன்கள் என்னென்ன என விளக்குகிறார் சித்த மருத்துவர் ஜெய வெங்கடேஷ்.
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimg.vikatan.com%2Fdoctor%2F2016%2F01%2Fzmziyt%2Fimages%2Fp71a%25281%2529.jpg&hash=b9ce4eda9514f7b58f93903ca95b8da4ab362908)