ஓவியம் உயிராகிறது ( படம் பார்த்து கவிதை கிறுக்கு ..)
நண்பர்கள் கவனத்திற்கு ....
சொந்த ஆக்கமும் ஊக்கமும் கொண்ட உங்களுக்காக உங்கள் சிந்தனை திறனை வளர்ப்பதற்கும் உங்கள் கற்பனைகளை மெருகூட்டுவதர்க்கும் ஏதுவாக உங்களுக்காக இந்த களம் அமைக்கப்பட்டு இருக்கிறது...
இங்கு ஒரு ஓவியம் அல்லது நிழல் படம் கொடுக்கப்படும் ... அந்த ஓவியத்துக்கு உங்கள் கற்பனைகளில் தோன்ற கூடிய உங்களால்
உயிர் கொடுக்க கூடிய சிந்தனைகளை கவிதை கிறுக்கல்களாக பதிவு செய்யலாம் ....
**இங்கே நீங்கள் சுயேட்சையாக புதிய பதிவுகளை மேற்கொள்ள முடியாது.இப்பகுதியில் கவிதை பதிவதற்கு முன்பதிவு செய்வது கூடாது. ( உங்கள் பதிவுகள் அழகுற அமைவதற்காக )..
***தயவு செய்து இங்கே பதியப்படும் பதிவுகளுக்கு யாரும் கமெண்ட்ஸ் போட வேண்டம்... அந்த நபருக்கு நீங்கள் பிரத்தியேகமாக pvt தகவலாக உங்கள் வாழ்த்து , தகவல்களை தெரிவித்து கொள்ளலாம் .
**முதலில் சொந்தமாக பதியப்படும் 8 கவிதைகள் மட்டுமே பிரதி சனிக்கிழமை அன்று நண்பர்கள் இணையதள வானொலியில் கவிதை நிகழ்ச்சியாக தொகுத்து வழங்கப்படும்.
.
நிழல் படம் எண் : 086
இந்த களத்தின்இந்த நிழல் படம் Viper அவர்களால் வழங்கப்பட்டுள்ளது ... ..... இந்த படத்திற்கு உங்கள் கவிதைகளால் உயிர் கொடுங்கள்...
.
உங்கள் கவிதைகளை எதிர் வரும் வியாழக்கிழமை GMT நேரம் 3:00 PM இக்கு முன்னதாக பதிவு செய்யவும்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ffriendstamilchat.org%2Fnewfiles%2FOVIYAM%2520UYIRAAGIRATHU%2F086.png&hash=bb3a699a4cb8d010c6d4c926a706d72cc7538c5f)
எதற்காக சம்பாதிகின்றோம்
என்று உணராமலே,
எதை நோக்கி பயணிக்கிறோம்
என்று தெரியாமலே,
அவதி அவதியாய்
ஓடும் இந்த கலிகாலத்தில்
விஞ்ஞான வளர்ச்சியின்
ஒரு அங்கமாக இன்று
நிறைய இணைய தளங்கள் ....
மனிதனின் நேரத்தை முழுங்கிட
புத்திசாலிகள் கண்டு பிடித்ததே
இந்த வலைத்தளங்கள்.
விரல் நுனியில் இன்று உடனுக்குடன்
நாம் பல விஷியங்களை தெரிந்து கொண்டாலும்,
இதன் பின் ஒளிந்து இருக்கும் ஆபத்துக்களை
உணராத விட்டில் பூச்சிகளாக சில மனிதர்கள்
சிக்கி கொள்கிறார்கள் ....
எங்கோ நடக்கும் ஒரு சகோதரியின்
பரிதாப நிலைக்கு பாவம் பார்த்து
வீறு கொண்டு கருத்துக்களை கோபமாக பகிரும்
வலைத்தள ஹீரோக்களுக்கு அருகில் நடக்கும்
அக்கரமத்தை தட்டி கேட்க தோணாதது ஏனோ ...
ஆனாலும் அப்பாவியாய் இருக்கும் பெண்களே,
சற்று சிந்தித்து உங்கள் புகை படங்களை
வலை தளங்களில் பதிவிடுங்கள்.
ஏன் என்றால் அழகை அன்போடு பார்க்க
அங்கு அன்னை தேரேசவோ
அன்பை போதிபவர்களோ இல்லை ....
எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று ஒருத்தி
தகவல் பகிர்ந்தால் என்ன ஆயிற்று என்று பதறும்
அதே கூட்டம் ஒரு ஆண் பகிர்ந்தால்
கயிறு அனுப்பவா மருந்து வேணுமா
என்று பாரா பட்சம் பார்க்கும் கேளிக்கை
மனிதர்கள் உலவும் இடம் அது ...
எந்த ஒரு கண்டு பிடிப்பிலும் சாதகமும் பாதகமும்
சேர்ந்தே இருக்கும் , எது நமக்கு தேவை
என்பதை நாம் தான் உணர்ந்து
நல்லதுக்கு மட்டுமே பயன் படுத்தி
அனைவரையும் பயன் பெற செய்ய வேண்டும் ...